எஸ்.பி. வேலுமணிக்கு தொடரும் சிக்கல்..! ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் சோதனை நடத்தும் மாநகராட்சிஅதிகாரிகள்

Published : Jul 26, 2022, 02:49 PM IST
எஸ்.பி. வேலுமணிக்கு தொடரும் சிக்கல்..!  ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் சோதனை நடத்தும் மாநகராட்சிஅதிகாரிகள்

சுருக்கம்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நெருக்கமானவர்களின் ஒருவரான ராஜேந்திரனின் ரியல் எஸ்டேட் நிறுவனம் கட்டிய கட்டிடங்களின் தரத்தை கோவை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

எஸ்.பி.வேலுமணிக்கு தொடரும் சிக்கல்

அதிமுக ஆட்சி காலத்தில் முக்கிய அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி, இவர் மீது திமுக மற்றும் அறப்போர் இயக்கம் சார்பாக பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டது. மேலும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.  எஸ்.பி. வேலுமணி அமைச்சராக இருந்த போது மாநகராட்சி டெண்டரில் மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டியிருந்தனர். இதனையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில்  வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்ததாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இதனையடுத்து எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இரண்டு முறை சோதனை நடத்தியுள்ளனர். அப்போது முக்கிய ஆவணங்களையும் 11 கிலோ தங்கம் 118 கிலோ வெள்ளி, கணக்கில் வராத ரொக்கம் 84 லட்சம் மற்றும் 34 லட்சம் ரூபாய் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்திருந்தது.  

ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு.. தேதி குறித்த உச்சநீதிமன்றம்.. விசாரிக்கப்போகும் நீதிபதிகள் யார் தெரியுமா?

பாஜக ஆலோசனை கேட்டு கட்சியை நடத்த வேண்டிய அவசியம் இபிஎஸ்க்கு இல்லை..! எகிறி அடிக்கும் எஸ்.பி.வேலுமணி

கட்டிட தரம்- சோதனை நடத்திய அதிகாரிகள்

இதனையடுத்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக எஸ்.பி.வேலுமணியின் நண்பரான அதிமுக நிர்வாகி சந்திரசேகர் வீட்டில் வருவமான வரித்துறை அதிகாரிகள் 6 நாட்களாக சோதனை நடத்தினர் அப்போது 500 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.இந்தநிலையில் கோவையில் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமானவராக இருக்கும் JRD ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேந்திரன் கட்டியுள்ள மற்றும் கட்டிவரும்  கட்டிடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.  கோவை புதூர் பகுதியில்  JRD ரியல் எஸ்டேட் நிறுவனம் கட்டியுள்ள வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்தனர். வீடுகள் உரிய அனுமதி பெற்று முறையாக கட்டப்பட்டு இருக்கின்றதா என கோவை மாநகராட்சி துணை ஆணையர் சர்மிளா தலைமையில் அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். முன்னாள்  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்திய போது JRD ரியல் எஸ்டேட்  நிறுவனத்திலும்  சோதனை நடத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

ரூ4000 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு?இபிஎஸ்யை நெருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை.!இறுதி விசாரணைக்கான தேதி அறிவிப்பு

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஷாக்கிங் நியூஸ்! பயங்கர சத்தத்துடன் ஃபிரிட்ஜ் வெடித்து தீ விபத்து! அலறிய குடும்பத்தினர் நிலை என்ன?
புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!