ரூ4000 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு?இபிஎஸ்யை நெருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை.!இறுதி விசாரணைக்கான தேதி அறிவிப்பு

By Ajmal KhanFirst Published Jul 26, 2022, 1:46 PM IST
Highlights

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கு ஆகஸ்ட் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

இபிஎஸ் மீது டெண்டர் முறைகேடு புகார்

தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றாகவும் இதுகுறித்து 2018ம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி வழக்கு தொடர்ந்தார்.  முதலமைச்சராக  எடப்பாடி கே.பழனிசாமி இருந்த போது அவரது உறவினர் ராமலிங்கம் என்பவருக்கு சாலை அமைப்பதற்கான டெண்டர் ஒதுக்கப்பட்டதாகவும், இதே போல பல்வேறு நிறுவனங்களான வெங்கடாஜலபதி அன்ட் கோ, எஸ்.பி.கே அன்ட் கோ நிறுவனத்திற்கு டெண்டர் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பதவியை தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என ஆர்.எஸ் பாரதி தனது புகார் மனுவில் தெரிவித்து இருந்தார்.  

பாஜக ஆலோசனை கேட்டு கட்சியை நடத்த வேண்டிய அவசியம் இபிஎஸ்க்கு இல்லை..! எகிறி அடிக்கும் எஸ்.பி.வேலுமணி

விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம்

இந்த வழக்கில் கடந்த 2018 அக்டோபர் 9ம் தேதி தீர்ப்பு வழங்கிய உயர்நீதுமன்ற நீதிபதி  ஜெகதீஷ் சந்திரா, எடப்பாடி பழனிசாமி மீதான புகார் வெளிப்படை தன்மையுடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டில் இவ்வழக்கில் விசாரனை நடத்திய உச்சநீதிமன்றம், பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடைவிதித்திருந்தது. இதன் பின்னர் இவ்வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருகிறது இந்நிலையில் இந்த வழக்கை விரைவாக விசாரித்து கொள்ளுமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் முறையிடப்பட்டது. அதன்படி வழக்கு இன்று  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதிமுக தலைமை அலுவலக பத்திரம் யாரிடம் உள்ளது..? திருட்டு புகாருக்கு காவல்நிலையத்தில் பதிலடி கொடுத்த ஓபிஎஸ் அணி

ஆகஸ்ட் 2 ல் இறுதி விசாரணை

அப்போது வழக்கில் எதிர்மனுதாரரானஆர்.எஸ்.பாரதி தரப்பில், இந்த வழக்கில் முன்பு ஆஜராகி வாதிட்ட வழக்கறிஞர் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டுள்ளார், அவரால் இந்த வழக்கில் தன் தரப்புக்கு ஆஜராக முடியாது,   எனவே வேறு வழக்கறிஞர்கள் குழு தான் தற்போது இந்த வழக்கை கையாளுகிறது, அது தொடர்பான வக்காலத்தும்  தாக்கல் செய்யப்பட்டுள்ளது, எனவே வழக்கை இரண்டு வாரத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என கோரப்பட்டது. ஆனால் தலைமை நீதிபதி இந்த வழக்கை அத்தனை நாட்கள் ஒத்திவைக்க முடியாது என கூறி வழக்கு மீதான விசாரணையை வரும் ஆகஸ்ட் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.மேலும் அன்றைய தினம் முதல் வழக்கின் இறுதி விசாரணை தொடங்கும் எனவும், அதனால் எந்த தரப்பும் வழக்கை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கக்கூடாது எனவும் திட்டவட்டமாக தலைமை நீதிபதி தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

பள்ளி கலவரத்துக்குக் காரணமானவர்கள் பட்டியலினத்தவர்களா..?உளவுத்துறை முடிவுக்கு எவ்வாறு வந்தது? அண்ணாமலை ஆவேசம்
 

click me!