குற்றவாளி தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை..! நீதிபதியின் தீர்ப்புக்கு மக்கள் வரவேற்பு..!

Asianet News Tamil  
Published : Feb 19, 2018, 04:52 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
குற்றவாளி தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை..! நீதிபதியின் தீர்ப்புக்கு மக்கள் வரவேற்பு..!

சுருக்கம்

thookuthandanai gave to daswanth confirmed court

சிறுமி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தஷ்வந்த் குற்றவாளி என அறிவித்து அவருக்கு தூக்கு தண்டனை அளித்து உத்தரவிட்டார் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற  நீதிபதி வேல்முருகன்.

2017 ஆம் ஆண்டு,பிப்ரவரி மாதம் போரூா் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து,கொலை செய்து எரித்துள்ளார்.

பின்னர்,இது தொடர்பாக தஸ்வந்த் கைது செய்யப்பட்டு குண்டா் தடுப்பு பிரிவில்  அடைக்கப்பட்டனர்

ஒரு வழியாக ஜாமீனில் வெளிவந்த போது, தன்னுடைய  தாயாரையும் கொலை செய்துவிட்டு,நகையை எடுத்துக்கொண்டு மும்பை சென்று பதுங்கிய தஸ்வந்தை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்து அழைத்து வரும் போது போலிசாரிடமிருந்து மீண்டும் தப்பி ஓடிய  தஸ்வந்தை மடக்கி பிடித்தனர் போலீசார்  

இந்நிலையில் சிறுமி ஹாசினி தொடா்பான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி வேல்முருகன்,  தஸ்வந்த குற்றவாளி என உறுதி செய்து,அவருக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதியை  நிலைநாட்டி உள்ளார்.

மூன்று பிரிவுகளின் கீழ் மொத்தம் 37 ஆண்டுகாலம் தண்டனையும்,அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனையும் வழங்கப் பட்டு உள்ளது.மேலும் நீதிபதியின் இந்த தீர்ப்புக்கு மக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 14 January 2026: டெல்லியில் பொங்கல் பண்டிகை.. பிரதமர், துணை குடியரசு தலைவர் பங்கேற்பு
அண்ணாமலைக்கு ஒன்னுனா நாங்க வருவோம்.. ராஜ் தாக்கரேவுக்கு எதிராக கொந்தளித்த சீமான்