குறைந்தபட்ச தண்டனை கொடுங்கள்...! நீதிபதியிடம் கதறிய தஷ்வந்த்...!

Asianet News Tamil  
Published : Feb 19, 2018, 04:49 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
குறைந்தபட்ச தண்டனை கொடுங்கள்...! நீதிபதியிடம் கதறிய தஷ்வந்த்...!

சுருக்கம்

Give Minimum Penalty ...! Tasvant begged the judge ...!

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு நீதிபதி தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார். நீதிபதி தீர்ப்பு வாசிக்கும்போது, தஷ்வந்த் கண்ணீர் விட்டு கதறி, நீதிபதியிடம் குறைந்தபட்ச தண்டனை கொடுங்கள் என்று கேட்டுள்ளான்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போரூர் அருகே முகலிவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 6 வயது சிறுமி மாயமானார். குடியிருப்பிற்கு அருகே இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். போலீஸாருடன் சேர்ந்து சிறுமியை தேடுவது போல் நடித்த அதே
குடியிருப்பில் வசித்த தஷ்வந்த் என்ற இளைஞர் மீது போலீஸாசாருக்கு சந்தேகம் ஏற்பட அவரைப் பிடித்து விசாரித்தனர். சிறுமியின் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் அவரை பாலியல் கொடுமைக்கு உட்படுத்தி, அதை வெளியில் சொல்லிவிட கூடாது என்பதற்காக சிறுமியை கொலை செய்து,
தீயிட்டு கொளுத்தி புறவழிச்சாலையோரம் புதரில் வீசியதை தஷ்வந்த் ஒப்புகொண்டான்.

காவல் துறையினரும் குண்டர் தடுப்பு காவலில் தஷ்வந்தை கைது செய்தனர். ஆனாலும் 90 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால் தஷ்வந்திற்கு ஜாமின் கிடைத்தது. இதையடுத்து சிறையிலிருந்து வெளியே வந்து அடுத்த 10 மாதத்தில் (டிசம்பரில்) தனது தாய் சரளாவை கொலை
செய்துவிட்டு வீட்டில் இருந்த நகைகளுடன் தஷ்வந்த் தலைமறைவானான். இந்நிலையில், தனிப்படை போலீஸார் மும்பையில் வைத்து தஷ்வந்தை இரண்டாவது முறையாக கைது செய்தனர். ஆனால் போலீஸாரை தாக்கிவிட்டு கைவிலங்குடன் தப்பிய தஷ்வந்தை, மும்பை போலீஸார் உதவியுடன்
மீண்டும் பிடித்து சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

அதன் பிறகு இனியும் தஷ்வந்த் தப்பக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த காவல் துறையினர், சிறுமி கொலை வழக்கில் சாட்சிகளை ஆஜர்படுத்தி வழக்கை துரிதப்படுத்தினர். 35 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று சமீபத்தில் இந்த வழக்கு முடிந்தது. இந்நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு இன்று
வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து காலை 11 மணியளவில் பலத்த பாதுகாப்புடன் தஷ்வந்த் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.  இதையடுத்து வழக்கின் தீர்ப்பு மதியம் ஒத்திவைக்கப்பட்டது. அதன் 3 மணி அளவில் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம்
அறிவித்தது. 

இந்த வழக்கு மீண்டும் 3 மணிக்கு நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வந்தது. தீர்ப்பை வாசித்த நீதிபதி, தஷ்வந்த் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என்று நீதிபதி அறிவித்திருக்கிறார். சிறுமி கொலை வழக்கில், தஷ்வந்த் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தஷ்வந்த் மீதான தீர்ப்பை நீதிபதி வாசிக்க வாசிக்க, முகம் வாடிப்போனதாகவும், உடல் சோர்ந்து காணப்பட்டதாகவும் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். மேலும், சிறுமியின் தரப்பு வழக்கறிஞர், தஷ்வந்துக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அப்போது, தஷ்வந்த் நீதிபதியைப் பார்த்து, தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கண்ணீர் விட்டு கெஞ்சியுள்ளான்.  ஆனாலும், தஷ்வந்துக்கு நீதிபதி அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 14 January 2026: டெல்லியில் பொங்கல் பண்டிகை.. பிரதமர், துணை குடியரசு தலைவர் பங்கேற்பு
அண்ணாமலைக்கு ஒன்னுனா நாங்க வருவோம்.. ராஜ் தாக்கரேவுக்கு எதிராக கொந்தளித்த சீமான்