
ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இதனை தொடர்ந்து தண்டனை விவரம் அறிவிக்க நீதிமன்றத்தை சற்று நேரம் ஒதுக்கி வைத்தார் நீதிபதி வேல்முருகன்.
இதற்கிடையில், நீதிமன்ற வளாகத்திற்குள் தஷ்வந்த் பேசியது...
வழக்கறிஞர்கள்,காவல்துறை,செய்தியாளர்கள் யாரும் என்னை பற்றி தவறாக செய்திகளில் போட வேண்டாம்..
நீதிபதி என்ன தீர்ப்பு வழங்குகிறாரோ,அதனை மட்டும் எழுதுங்கள்.... தேவை இல்லாமல் என்னை பற்றி எழுக வேண்டாம் என நீதிமன்ற வளாகத்திலேயே கட்டளை இடுவது போல் கோபமாக பேசி உள்ளார் தஷ்வந்த்.
உளவியல் ரீதியாக தயாரான தஷ்வந்த்
எந்த தண்டனை கொடுத்தாலும் பரவாயில்லை என்ற மன நிலையில் தஷ்வந்த் உள்ளதாக தெரிகிறது.
குற்றம் செய்ததை நினைத்து வருந்துவதற்கு பதிலாக,மேலும் தன்னுடைய கோபத்தை அதிகரித்து,செய்தியாளர்களுக்கும் காவலர்களுக்கும் கட்டளை இடுவது போல் கோபமாக பேசி உள்ளார் தஷ்வந்த்.
சிறுமி ஹாசினியின் பெற்றோர்...
தஷ்வந்த் க்கு என்னதான் தண்டனை வளாங்கினாலும், எப்படியும் எங்கள் அன்பு மகள் ஹாசினி எங்களுக்கு கிடைக்க போவதில்லை.. ஆனால் தஷ்வந்த்க்கு தூக்குதண்டனை கிடைத்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்து உள்ளார்.