
சிறுமி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தஷ்வந்த் குற்றவாளி என செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
2017 ஆம் ஆண்டு,பிப்ரவரி மாதம் போரூா் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் 6 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்து எரித்துள்ளார்.
பின்னர்,இது தொடர்பாக தஸ்வந்த் கைது செய்யப்பட்டு குண்டா் தடுப்பு பிரிவில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் சிறுமி ஹாசினி தொடா்பான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், தஸ்வந்த் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ளார்.