குடும்ப தகராறில் மகளைக் கோடாரி கட்டையால் அடித்துக் கொன்ற கொடூரம்!

Asianet News Tamil  
Published : Feb 19, 2018, 01:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
குடும்ப தகராறில் மகளைக் கோடாரி கட்டையால் அடித்துக் கொன்ற கொடூரம்!

சுருக்கம்

father killed daughter

மனைவி மீதான சந்தேகம் காரணமாக நிகழ்ந்த தகராறில், மகளை கோடாரி கட்டையாள் அடித்து கொலை செய்த சம்பவம் திருமங்கலம் அருகே நிகழ்ந்துள்ளது. பலத்த காயமடைந்த மனைவி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருமங்கலம் அருகே வி.ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி லட்சுமி, மகள் இருளாயி உள்ளனர். இருளாயி 5 ஆம் வகுப்பு படிதது வருகிறார். மேலும் இந்த தம்பதியினருக்கு வேல்முருகன் (6) என்ற மகனும், மருது என்ற 8 மாத கைக்குழந்தையும் உள்ளனர்.

மனைவி லட்சுமியின் நடத்தை மீது முருகன் சந்தேகம் கொண்டு அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதே போன்று நேற்று அதிகாலை கணவன் - மனைவி இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த முருகன், கோடாரியை எடுத்து மனைவியை வெட்டியுள்ளார். கோடாரி கட்டையாள் அங்கிருந்த மகளையும் தாக்கியுள்ளார். இதில், இருளாயின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து அருகில் இருந்தோர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார், படுகாயமடைந்த லட்சுமியை மீட்டு, விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், உயிரிழந்த சிறுமி இருளாயியின் உடலை, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மனைவியை கொடாரியால் தாக்கிவிட்டும், மகளை கொலை செய்து விட்டும் முருகன் தப்பியோடி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, முருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்.. இனி 12 மாதமும் சம்பளம், ரூ.2500 ஊதிய உயர்வு.. அமைச்சர் மகேஸ் அறிவிப்பு
சுத்தமான குடிநீர் வழங்க வக்கில்லை வளர்ச்சி பற்றி பேசுவதா..? திமுக அரசை விளாசிய அன்புமணி