உல்லாசத்துக்கு தடையாக இருந்த கணவன்! கள்ளக்காதலனுடன் சேர்ந்து பாறாங் கல்லை தூக்கி போட்டு கொன்ற மனைவி!

Asianet News Tamil  
Published : Feb 19, 2018, 12:56 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
உல்லாசத்துக்கு தடையாக இருந்த கணவன்! கள்ளக்காதலனுடன் சேர்ந்து பாறாங் கல்லை தூக்கி போட்டு கொன்ற மனைவி!

சுருக்கம்

Husband who hindered the excitement Wife killed

உல்லாசத்துக்கு தடையாக இருந்த கணவனை ஏமாற்றி அழைத்துச் சென்று கள்ளக்காதலனுடன் சேர்ந்து பாறாங் கல்லை தூக்கி போட்டு கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி கையும் களவுமாக சிக்கினார்.

திருவண்ணாமலை அருகே உள்ள மருத்துவாம் பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து கொண்டு அரசு பணிக்கு முயற்சித்து வந்தார். இதற்காக, திருவண்ணாமலையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் அரசு தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வந்தார். சுரேஷூக்கும், திருவண்ணாமலை தேவனாம்பட்டு கிராமத்தை சேர்ந்த தீபாவுக்கும் , கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மனைவியுடைய ஊர் தேவனாம்பட்டிலேயே சுரேஷ் வசித்து வேலைக்கு சென்று வந்தார்.  சுரேஷ் மட்டும் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற முடியாததால் மாணவி தீபாவும், திருவண்ணாமலையில் உள்ள கணினி மையத்தில் வேலை செய்து வந்தார் அப்போது

தேவனாம்பட்டு அருகே உள்ள மேப்பத்துறையை சேர்ந்த பிரபு  என்பவருடன் தீபாவுக்கு தொடர்பு ஏற்பட்டது (பிரபுவிற்கு சொந்தமாக கிரின் இயந்திரம் வைத்திருப்பவர். பணம் காசு நடமாட்டம் அதிகமாக இருக்கும் நபர்) இது நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. இருவரும் தினமும் போன் மூலம் பேசியும், அடிக்கடி தனிமையில் சந்தித்தும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்த கள்ளக் காதல் விவகாரம் கணவன் சுரேஷுக்கு தெரியவந்தது. இதனால் மனைவியை அவர் கண்டித்தார். ஆனாலும், கள்ளக்காதலனுடன் தீபா தொடர்ந்து நெருங்கி பழகி உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இது, சுரேஷூக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. கள்ளக்காதலை விடும்படி, சண்டை போட்டுள்ளார். மனைவி நடத்தையை கண்காணிக்க தொடங்கினார். கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதற்கு கணவர் சுரேஷ் தடையாக இருந்தது, தீபாவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

கணவரை தீர்த்துக் கட்ட கள்ளக்காதலனுடன் சேர்ந்து சதித் திட்டம் போட்டார். இந்த நிலையில், நேற்று மாலை சுரேஷ் திருவண்ணாமலை பயிற்சி மையத்திற்கு புறப்பட்டார். அப்போது தீபாவும் உடன் வருவதாக கூறினார். சுரேஷூம், குழந்தைகளை வீட்டிலேயே விட்டு விட்டு திருவண்ணாமலைக்கு மனைவியை பைக்கில் கூட்டி சென்றார்.

வேலைகளை முடித்து விட்டு இரவு வீடு திரும்பினர். இனாம்காரியந்தல் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு கணவரை, தீபா அழைத்துச் சென்றார். அங்கு நேரத்தை தாமதப்படுத்தி இரவு 9 மணி அளவில் பேசிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டனர். அப்போது திருவண்ணாமலை அருகே ஊசாம்பாடி பொன்னி நகர் பகுதியில் உள்ள காலிமனை அருகே சென்றபோது, சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தீபா கூறினார்.

வண்டியை நிறுத்திய அந்த பகுதியில் காலி மனையாக இருந்த அந்த இடம், ஆள் நடமாட்டம் இல்லாமல் இருள் சூழ்ந்து இருண்டது. அங்கு சுரேஷ் பைக்கை நிறுத்தினார். அப்போது தீபா, சிறுநீர் கழிக்க ஓரமாக ஒதுங்கினார். அங்கு மறைந்து இருந்த அவருடைய கள்ளக்காதலன் பிரபு பாறாங் கல்லை தூக்கி கணவன் சுரேஷின் தலையில் போட்டார். இதில் நிலை குலைந்த சுரேஷ் கீழே விழுந்தார். மீண்டும் கல்லால் சுரேஷின் தலையில் கள்ளக்காதலன் பிரபு சரமாரியாக தாக்கினார்.

பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சுய நினைவை இழந்து உயிருக்கு போராடினார். இதையடுத்து, கணவரை தீர்த்துக் கட்டிய சந்தோ‌ஷத்தில் கள்ளக்காதலனை அந்த இடத்திலிருந்து தப்பிக்க வைத்தார் தீபா.

பிறகு, உறவினர்களுக்கு போன் செய்து கணவரை மர்ம நபர்கள் வழி மறித்து தாக்கி விட்டதாக நாடகமாடி, இனி அவர் பிழைக்க மாட்டார் என்று தெரிந்த பிறகு, ஆம்புலன்சை வரவழைத்து கணவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். தீபா நினைத்தபடியே சிகிச்சை பலனின்றி கணவர் சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 இச்சம்பவம் குறித்து, திருவண்ணாமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஆசிரியரை அவரது மனைவியே கொன்ற ‘பகீர்’ தகவல்கள் கிடைத்ததையடுத்து கள்ளக்காதலனை தேடுதல் வேட்டை நடத்தி விடிவதற்குள் பிடித்தனர்.

தீபாவையும், அவருடைய கள்ளக்காதலன் பிரபுவையும் கைது செய்தனர். மேலும் ஆசிரியர் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒரு சிலருக்கு தொடர்புள்ளதும் தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்கவும் போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருக்க தடையாக இருந்த கணவனை மனைவிஎ நம்பவைத்து அழைத்து சென்று கொடூரமாக கொன்று நாடகமாடிய சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

PREV
click me!

Recommended Stories

வடமாநில பெண்கள் படிக்காத அடிமைகள்.. திராவிட மாடல் பெண்கள் மெத்த படித்த மேதாவிகள்..! சீண்டிய தயாநிதி மாறன்..!
சங்கி குழு பொங்கலில் பராசக்தி டீம்..! ஜனநாயகன் மட்டும் பிளாக்..! திமுகவை போட்டு பொளக்கும் மாணிக்கம் தாகூர்