இந்த 3 மாவட்ட மக்களே 2 நாட்களுக்கு வெளியில் வராதீங்க !! அதி தீவிர அனல் காற்று வீசுமாம் !!

By Selvanayagam PFirst Published Jun 17, 2019, 7:38 AM IST
Highlights

வட தமிழகத்தில்  திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும்  வேலுர் ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதி தீவிர அனல்காற்று வீசும் என்றும், பொது மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆண்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,  தென்மேற்குப் பருவமழை மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று  மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வட தமிழகத்தில் இன்றும்,  நாளையும்  அதி தீவிர அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி தீவிர அனல்காற்று வீச வாய்ப்பு உள்ளது என்றும்,  சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் வட மாவட்டங்களில் குறிப்பான திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் உள்ள பொது மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

click me!