அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட இளம்பெண் உயிரிழப்பு.. நடந்தது என்ன? உறவினர் பகீர் தகவல்!

By vinoth kumar  |  First Published Apr 28, 2024, 12:20 PM IST

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியை சேர்ந்த துர்கா(26) என்பவர் 2-வது பிரசவத்திற்காக அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை அன்று அனுமதிக்கப்பட்டார். 


அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட இளம்பெண் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியை சேர்ந்த துர்கா(26) என்பவர் 2-வது பிரசவத்திற்காக அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை அன்று அனுமதிக்கப்பட்டார். அன்று இரவு துர்காவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே துர்காவிற்கு ஐந்து வயதில் குழந்தை உள்ள நிலையில் துர்காவிற்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய துர்காவின் கணவர் பன்னீர்செல்வம் மருத்துவரை அணுகி உள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: செட்டிநாடு சிக்கன் கிரேவியில் நெளிந்த புழுக்கள்! முறையிட்ட வாடிக்கையாளர்! உரிமையாளர் என்ன சொன்னாரு தெரியுமா?

அதனைத் தொடர்ந்து துர்காவிற்கு அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்த போது அதிக ரத்த போக்கு ஏற்பட்டதால் உடனடியாக மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென்று நேற்று காலை துர்கா பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து துர்காவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆடு மேய்க்க சென்ற இடத்தில் பயங்கரம்! மூதாட்டியின் காலை கடித்து குதறிய முதலை.. ரத்தம் சொட்ட சொட்ட கதறல்!

இது குறித்து உறவினர் கூறுகையில்:-மருத்துவர்கள் துர்காவிற்கு எந்தவிதமான பரிசோதனை செய்யாமல் குடும்ப கட்டுப்பாடு செய்துள்ளனர். துர்காவின் இரத்தின் அளவு குறைவாக இருப்பதாக மருத்துவர் கூறிய நிலையில் குடும்ப கட்டுப்பாடு செய்ததால் அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டது. இது குறித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்ட போது எந்த விதமான பதிலளிக்கவில்லை என்றனர். இதுகுறித்து புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வழக்குப் பதிவு செய்யாமல் காலம் தாமதம் செய்து வருகின்றனர். இதனால் இறந்து இரண்டு நாட்கள் ஆகியும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளாமல் துர்காவின் உடல் பிணவறையில் இருப்பதாக உறவினர் கூறியுள்ளனர். 

click me!