ஆட்சியர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை... ஜூன் 4க்கு பிறகு என்ன நடக்குதுனு பார்ப்போம்- ரகுபதி அதிரடி

By Ajmal Khan  |  First Published Apr 28, 2024, 1:17 PM IST

புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது கல்லூரிக்கும்  அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்வதாக அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். 


குஜராத்தில் போதைப்பொருள்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில்ர திமுக தலைவரும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் படி தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், புதுக்கோட்டையில்  புதிய பேருந்து நிலையம் மற்றும் மாவட்ட திமுக அலுவலகம் முன்பாக கோடை கால சிறப்பு தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எம்எல்ஏ முத்துராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர்.

Tap to resize

Latest Videos

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம், அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப்பொருள்கள் வருகிறது, பின் பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது, 

இந்தியா கூட்டணியில் ஒராண்டில் 2 அல்லது 4 பிரதமர்கள்: சஞ்சய் ராவத் கருத்து!

ஆட்சியரிடம் அமலாக்கத்துறை விசாரணை

குஜராத்தில் போதை பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது  என்பது அதிசயமான செயல் இல்லையென கூறினார். குஜராத் மாநிலம் தான் போதை பொருட்கள் புழக்கத்திற்கு முன்னோடி மாநிலமாக உள்ளது என்பதற்கு தற்போது போதை பொருள் அங்கு பிடிபட்டுள்ளது சான்று என தெரிவித்தார்.  அமலாக்கத்துறை மாவட்ட ஆட்சியர்களிடம் மணல் குவாரி முறைகேடு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை பெற்றுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்த விசாரணையின் போக்கு ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு எவ்வாறு செல்கிறது என்பதை பார்ப்போம் என கூறினார்.  மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோளப்பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார், அது நிதி எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள், இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி நீதிமன்ற மூலமாக மீண்டும் வலியுறுத்துவோம் என கூறினார். 

வயலுக்கு காவிரி தண்ணீர்

புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும்  அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்வதாக தெரிவித்த அவர், வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான் என குற்றம்சாட்டினார். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதனை பார்க்கலாம், அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள் அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது எனவும் கூறினார்.  ஆனால் இதை அனுமதிக்க முடியாது விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தார். 

கடையில் வாங்கிய கோப்பையுடன் வந்த நபரிடம் போட்டோ எடுத்த உதயநிதியிடம் வேறு என்ன எதிர்பார்ப்பது-விளாசும் இபிஎஸ்

click me!