திருவேங்கடநாதபுரம் கோவில் புரட்டாசி பிரம்மோற்சவ கருட சேவை.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Published : Sep 25, 2022, 03:43 PM IST
திருவேங்கடநாதபுரம் கோவில் புரட்டாசி பிரம்மோற்சவ கருட சேவை.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

சுருக்கம்

நெல்லை மாவட்டம் திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவத்தில் இன்று  கருடசேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  

நெல்லை மாவட்டம் திருவேங்கடநாதபுரத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள சிறு குன்றின் மீது இக்கோவில்  அமைந்துள்ளது. இங்கு வெங்கடாசலபதி ஸ்ரீதேவி, பூதேவியுடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

இங்கு புரட்டாசி பிரம்மோற்சவத்தையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  பின்னர் வெங்கடாசலபதி மற்றும் தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது. வெங்கடாசலபதி கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மேலும் படிக்க:போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு.. நெல்லை மினி மராத்தான் போட்டி..

ஆழ்வார்கள் படிகளில் குடை சாத்தி தீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 

PREV
click me!

Recommended Stories

இரண்டு ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! நீயெல்லாம் பேசவே கூடாது.. அமைச்சர் ரகுபதி
தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்