மக்கள் விரோத மாடலை தான் திராவிட மாடல் என திமுக கூறி வருகிறதோ..? ஸ்டாலினை அலறவிடும் ஓபிஎஸ்

Published : Sep 25, 2022, 03:03 PM IST
மக்கள் விரோத மாடலை தான் திராவிட மாடல் என திமுக கூறி வருகிறதோ..? ஸ்டாலினை அலறவிடும் ஓபிஎஸ்

சுருக்கம்

“திராவிட மாடல்” என்று சொல்லிக் கொண்டு முதியோர் ஓய்வூதியத் திட்டப் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் தி.மு.க. அரசிற்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

முதியோர் ஓய்வூதியம் நிறுத்தம்

ஓய்வூதிய திட்டத்தில் பயணாளிகளின் எண்ணிக்கையை திமுக அரசு குறைத்து வருவதாக ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் உதவித் தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும்" என்ற வாக்குறுதியை தேர்தல் சமயத்தில் அள்ளி வீசிய தி.மு.க., ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் கடந்த நிலையில், இந்த வாக்குறுதியை நிறைவேற்றாததோடு மட்டுமல்லாமல், பயனாளிகளின் எண்ணிக்கையை இலட்சக்கணக்கில் குறைத்துள்ளதாக செய்தி வந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, “கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது" என்ற பழமொழி தான் பொதுமக்களின் நினைவிற்கு வருகின்றது.

இது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும். முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்களும், இன்னும் இலட்சக்கணக்கான நபர்களை சேர்த்தபிறகு ஓய்வூதியத்தை 1,500 ரூபாயாக உயர்த்த அரசு திட்டமிட்டு இருக்கிறது என்று நினைத்து, இதற்கான அறிவிப்பு 2022-2023-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இடம் பெறும் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், அதிலும் ஏமாற்றம் தான் மிச்சம்.

எரிவாயு உருளை அடிப்படையில் ஓய்வூதியம்

இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் ஓய்வூதியம் பெற்று வந்த பயனாளிகளில் 1 இலட்சத்து 82 ஆயிரம் முதியோருக்கான ஓய்வூதியத்தை தி.மு.க. அரசு ரத்து செய்துள்ளதாக வந்துள்ள செய்தி ஏழையெளிய வருவாய் இல்லாத முதியோரை கடும் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. "விடுதலின்றி பயன் பெறுவது" என்பதற்குப் பதிலாக "இருப்பவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்" என்ற பரிதாபகரமான நிலைதான் தற்போது நிலவுகிறது. இதுகுறித்து, அரசு அதிகாரிகள் கூறுகையில், முதியோர் ஓய்வூதியம் பெறுவோரின் ஆதார் எண் அடிப்படையில் எரிவாயு உருளை, நகைக் கடன் போன்ற விபரங்களை முதியோர் ஓய்வூதியம் பெறுவோரின் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்த்து அளிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், இலட்சக்கணக்கான முதியோர்களின் ஓய்வூதியத்தை அரசு நிறுத்தியுள்ளது எனத் தெரிவிக்கின்றனர்.முதியோர் ஓய்வூதியம் என்பது அரசு அதிகாரிகளால் கள ஆய்வு மேற்கொண்ட பிறகு, அவர்களுடைய வருமானம், வறுமை நிலை ஆகியவற்றின் அடிப்படையில்நாள் வழங்கப்படுகிறது. 

தேர்தலை மனதில் வைத்து மதக்கலவரத்திற்கு திட்டம்..?இந்துத்துவக்கும்பலின் சதி செயலை அரசு புரிய வேண்டும்- சீமான்

மக்கள் விரோத மாடல்

இவ்வாறிருக்க, முதியோர்களுக்கு இருக்கின்ற சொத்துக்களின் அடிப்படையிலோ அல்லது அவருடைய பிள்ளைகளுடைய வருமானத்தின் அடிப்படையிலோ அல்லது அவர்கள் வீடுகளில் உள்ள பொருட்களின் அடிப்படையிலோ ஓர் ஆய்வை மேற்கொண்டு அதன் அடிப்படையில் அவர்கள் வறுமை கோட்டிற்கு மேல் உள்ளார்கள் என்று தெரிவித்து அவர்களுக்கு கொடுக்கப்படும் முதியோர் அது ஏற்கத்தக்கதல்ல.  இன்னும் ஓய்வூதியத்தை அரசு நிறுத்தினால் அது சொல்லப்போனால், முதியோர் ஓய்வூதியம் கொடுக்கப்படுவதனால்தான், அவர்களது பிள்ளைகள் அவர்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுபோன்ற நிலையில், முதியோர்கள் பெறுகின்ற ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால், அவர்கள் எல்லாம் அனாதை இல்லங்களை நோக்கிச் செல்லக்கூடிய அவல நிலைமை ஏற்படும். ஒரு வேளை, இதுபோன்ற 'மக்கள் விரோத மாடல்’ என்பதைத் தான் 'திராவிட மாடல்' என்று தி.மு.க. சொல்கிறது போலும்! வயதான ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கும் தி.மு.க. அரசின் இந்த மக்கள் விரோதச் செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். 

இதையும் படியுங்கள்

தமிழ்நாட்டின் அமைதியை கெடுக்க முயற்சி.? சமூக நல்லிணக்கப் பேரணிக்கு அழைப்பு விடுத்த திருமாவளவன்

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரண்டு ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! நீயெல்லாம் பேசவே கூடாது.. அமைச்சர் ரகுபதி
தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்