தமிழகத்தில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு.? 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா..?

By Ajmal KhanFirst Published Sep 25, 2022, 1:15 PM IST
Highlights

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களிங் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

இடி மின்னலோடு லேசான மழை

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வறண்ட வானிலையே காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்தநிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மைய தென் மண்டல இயக்குனர் செந்தாமரைக் கண்ணன் வெளியிட்டுள்ள தகவலில், 25.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  26.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

14 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி  மாவட்டங்கள் மற்றும்  புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 27.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 28.09.2022 மற்றும் 29.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை  அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

பெட்ரோல் குண்டு வீசிய குற்றவாளிகள் கைது..! தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் டிஜிபி எச்சரிக்கை

சென்னையில் மேகமூட்டம்

அதிகபட்ச வெப்பநிலை 36-37  டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவை பொறுத்தவரை மஞ்சளாறு (தஞ்சாவூர்) 4, செந்துறை (அரியலூர்), தலைஞாயிறு (நாகப்பட்டினம்) தலா 3, திருக்குவளை (நாகப்பட்டினம்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), முகையூர் (விழுப்புரம்) தலா 2, திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), கும்பகோணம் (தஞ்சாவூர்) தலா 1 செ.மீ மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

தேர்தலை மனதில் வைத்து மதக்கலவரத்திற்கு திட்டம்..?இந்துத்துவக்கும்பலின் சதி செயலை அரசு புரிய வேண்டும்- சீமான்
 

click me!