மதுரை ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.! தமிழகத்தில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்

By Raghupati RFirst Published Sep 24, 2022, 11:50 PM IST
Highlights

மதுரை ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள பி.எஃப்.ஐ அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி, அவரைக் கைது செய்தனர். இதற்கு  எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், கோவை, சித்தாபுதூர் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகம்மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றனர். அதே போல ஒப்பணக்கார வீதியில் உள்ள மாருதி என்ற துணிக்கடைமீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மேலும், இரண்டு அரசுப் பேருந்துகள்மீது கல் வீசி சேதப்படுத்தப்பட்டன. இதனிடையே, பெட்ரோல் குண்டு வீச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகளுக்கு..கணவருடன் முன்னாள் காதலியை சேர்த்து வைத்த மனைவி.. ஜில்லுனு ஒரு காதல் குந்தவியை மிஞ்சிய சம்பவம்!

அடுத்து பொள்ளாச்சி பா.ஜ.க பிரமுகர் சிவக்குமார் என்பவர் வீட்டில், மர்ம நபர்கள் பிளாஸ்டிக் கவரில் டீசல் நிரப்பி வீசியிருக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து பாஜக அலுவலகம் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனையடுத்து கோவையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஈரோட்டிலும் பாஜக பிரமுகர் வீடு அருகே குண்டு வீசப்பட்டது.

The CCTV footage of the petrol bomb thrown at RSS Sr Karyakartha Sh.Krishnan Avl’s residence.
CM Avl do you have any control over the law and order??? pic.twitter.com/8lasx9DvRD

— Amar Prasad Reddy (@amarprasadreddy)

மதுரை ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு pic.twitter.com/ve4efAJjzw

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

இந்த நிலையில் தற்போது மதுரையில் உள்ள ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை மேல இருப்பானேடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் அனுமந்தையர் மகன் கிருஷ்ணன் (வயது 55) மனைவி. கிருஷ்ணன் கம்யூட்டர் சாம்பிராணி தயாரிப்பு தொழில் செய்து வருகிறார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் அனுப்பானடி மண்டல் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு..கணவனை கைவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. அதுக்குன்னு இப்படியா பண்றது ? அதிர்ச்சி சம்பவம்

இந்நிலையில் இரவு 7.40 மணியளவில் 2 பேர் கொண்ட கும்பல் டூ வீலரில் வந்து 3 பெட்ரோல் குண்டுகளை கார் ஷெட்டில் வீசியதில் சரக்கு வாகத்தின் மேல் விழுந்து ஒன்றும், மற்றொன்று வெளியே விழுந்தும் வெடித்தது. இதில் வெடிக்காத மற்றொரு பெட்ரோல் குண்டு ஒன்று கார்ஷெட்டின் உள்ளே விழுந்தது.

சம்ப இடத்திற்கு வந்த காவல்துறை துணை ஆணையர் சீனிவாச பெருமாள் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு, அருகில் இருந்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். பரபரப்பான மதுரை மாநகர் மேலா அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..“தமிழக அரசுக்கு 2 நாள் கெடு.. எல்லாம் சரியா நடக்கணும் அப்படியில்ல.! திமுகவை எச்சரிக்கும் அண்ணாமலை”

click me!