மஹாளய அமாவாசை.. வைகையாற்றில் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபட்ட மக்கள்..

By Thanalakshmi VFirst Published Sep 25, 2022, 1:37 PM IST
Highlights

மஹாளய அமாவாசையை முன்னிட்டு மதுரை வைகையாற்றில் பொதுமக்கள் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.
 

மறைந்த முன்னோர்களுக்கு புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை அன்று தர்ப்பனம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது  நம்பிக்கை.அதன்படி இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மக்கள் தங்களது முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தினர். 

மதுரை வைகையாற்றில் ஏராளமானோர் இன்று தர்பணம் செய்தனர். அரிசி, காய்கறி, கீரை உள்ளிட்ட பொருட்களை புரோகிதர்களுக்கு தானமாக வழங்கி மறைந்த தங்கள் முன்னோர்களை வழிபட்டனர். 

மேலும் படிக்க:15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மீன்பிடித் திருவிழா.. பெரிய, பெரிய மீன்களை பிடித்து மகிழ்ந்த மக்கள்..

மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்தவர்கள், வைகை கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, வழிபட்டு சென்றனர்.

click me!