Thiruvallur : போலீசார் மீது கல் வீச்சு.. தப்பியோடிய வடமாநிலத்தவர்கள்.. துப்பாக்கி முனையில் ஐவர் கைது!

By Ansgar R  |  First Published Jun 30, 2024, 11:11 PM IST

Thiruvallur : திருவள்ளூர் அருகே திரைப்பட பாணியில், போலீசாரை கற்களை வீசி தாக்கிவிட்டு, தப்பி ஓடியுள்ளார் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சிலர்.


தமிழகம் முழுவதும் போதைப்பொருள் தடுப்பு போலீசார் தற்பொழுது தீவிர சோதனைகள் நடத்தி வரும் நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கார் ஒன்றில் கஞ்சாவோடு சென்று கொண்டிருந்த ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட ஐவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அப்பொழுது அந்த ஐவரும் போலீசாரை கற்களால் கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். 

அவர்களால் வந்த வேனில், கஞ்சா மட்டுமின்றி Screw Driver மற்றும் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களும் இருந்துள்ளது. இதனை அடித்து தப்பி ஓடியவர்களை உடனடியாக பிடிக்க அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அருகில் இருந்த மற்ற காவல் நிலையங்களுக்கும், ஆந்திர மாநில எல்லை சோதனை சாவடிக்கும் உடனடியாக போலீசார் தகவல் கொடுத்து உஷார் படுத்தியுள்ளனர். 

Tap to resize

Latest Videos

undefined

அதிமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி படுகொலை! அலறியடித்து ஓடிய பொதுமக்கள்! பதற்றம்! போலீஸ் குவிப்பு!

இந்நிலையில் தப்பி ஓடிய 37 வயதுடைய அல்தாப், 44 வயதுடைய அஸ்லாம் கான், 24 வயது ஆசிப் கான், 32 வயதுடைய சலீம் மற்றும் கவரப்பேட்டை அருகே உள்ள கிளிக்கோடு என்ற கிராமத்தை சேர்ந்த திவாகர் என்ற 25 வயது நபரும் கைது செய்யப்பட்டனர். துப்பாக்கி முனையில் போலீசார் இவர்களை கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திவாகரை தவிர மற்ற நான்கு பேரும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தற்பொழுது தெரிய வந்திருக்கிறது. அவர்கள் தப்பி செல்ல பயன்படுத்திய அந்த வாகனம் தற்பொழுது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓடிய இருவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கைது செய்யப்பட்ட ஐவர் மீதும் 321, 294 பி, 353, 399, உள்ளிட்ட 6 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ரகசிய தகவல் கொடுத்த இன்பார்மர்! போதை ஸ்டாம்ப் விற்பனை செய்த 4 பேர் கைது! இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

click me!