"40 ஆண்டுகளாக இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு இன்றைக்கு யுனானிக்கு தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் தந்து அரசு மருத்துவமனைகளில் யுனானி மருத்துவ சேவையை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் ரூ.14.25 கோடி மதிப்பிலான அதிநவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் யுனானி மருத்துவ பிரிவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: "கிண்டியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை என்பது மிகப்பெரிய வரலாற்று சாதனையை படைத்து வருகிறது.
கடந்த ஓராண்டில் மட்டும் 3,13,854 புறநோயாளிகளாக பயன்பெற்று இருக்கிறார்கள். உள்நோயாளிகளாக ஓராண்டில் 66855 பேர் பயன்பெற்று இருக்கிறார்கள். இதுவரை 2315 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் 15 அறுவை அரங்குகள் உள்ளது, ரத்தப்பரிசோதனைகளைப் பொறுத்தவரை, 7,89,913 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
வயசு ஏறிட்டே போகுது... திருமணம் செய்து வைக்காத விரக்தியில் பாட்டியை அடித்துக் கொன்ற பேத்தி!
சிடி ஸ்கேன் பரிசோதனைகள் 7512 என்கின்ற வகையில் நடைபெற்று இருக்கிறது. 25 அதிநவீன டயாலிசிஸ் இயந்திரங்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதன்மூலம் 7,389 டயாலிசிஸ்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இம்மருத்துவமனையை இன்னமும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனையாக தரம் உயர்த்திட வேண்டும் என்கின்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி ரூ.14.25 கோடி மதிப்பீட்டில் 2 அதிநவீன மருத்துவ உபகரணங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இந்திய முறை மருத்துவத்தில் applied Mechanics மற்றும் பயோமெடிக்கல் பொறியியல் துறையின் மூலம் புதிய தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு இந்திய தொழில்நுட்ப கழகம் அதனுடன் இந்திய மருத்துவத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் என்று சொல்லப்பட்டது.
அதனுடன் துறையின் ஆணையர், ஐஐடியின் இயக்குநர் காமக்கோட்டி இன்றைக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ளது. ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி மத்திய கவுன்சில் அதன் மூலம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்திய மருத்துவமனையில் வழங்கப்படுகின்ற மருந்துகளின் தரத்தை அறிவதற்கும், ஆயுர்வேத அறிவியல் மத்திய ஆராய்ச்சி அதற்கான மத்திய குழுவுடன் இணைந்து ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்காக இன்றைக்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. பொது மக்களுக்கு 100 சதவிகிதம் சித்த மருந்துகளின் அதிலே எந்தந்த வெளிப்படைத்தன்மையாக மருந்துகள் குறித்த ஒரு உண்மை நிலையை தெரிந்து கொள்வதற்கு ஒரு சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டு ஒரு புத்தகம் இன்றைக்கு வெளியிடப்பட்டு இருக்கிறது. அரசு யுனானி மருத்துவ சேவையை கலைஞர் நூற்றாணடு உயர் சிறப்பு மருத்துவமனையில் புதிதாக தொடங்கி வைத்திருக்கிறோம்.
அதற்கென்று பிரத்யேகமாக ஒரு மருத்துவ மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கோவிட் காலத்தில் கூட யுனானி மருத்துவம், தமிழ்நாட்டில் செயல்படுத்திட வேண்டும் என்கின்ற கோரிக்கை வந்த போது வாணியம் பாடியில் யுனானி கோவிட் கேர் சென்டர் தொடங்கி வைத்தோம். பிரத்யேகமாக திறந்து வைக்கப்பட்ட இந்த யுனானி கோவிட் கேர் சென்டரில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய தாய்மார்கள் அன்றைக்கு மிகப்பெரிய அளவில் உயிரிழப்பின்றி பயன்பெற்றார்கள். அந்த வகையில் யுனானி மருத்துவ சேவையை கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் தொடங்கி வைப்பதில் பெருமை அடைகிறோம்.
40 ஆண்டுகளாக இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு இன்றைக்கு யுனானிக்கு தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் தந்து அரசு மருத்துவமனைகளில் யுனானி மருத்துவ சேவையை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை ஆணையர் மைதிலி கே.ராஜேந்திரன், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் கோவிந்தராவ், இந்திய தொழில்நுட்ப கழக இயக்குநர் காமக்கோட்டி, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி, ஒருங்கிணைப்பு அலுவலர் ரமேஷ், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை இணை இயக்குநர்கள் பார்த்திபன், மணவாளன், மருத்துவத்துறை பேராசிரியர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
இந்துவா எனக் கண்டறிய டி.என்.ஏ சோதனையா! ரத்த மாதிரிகளுடன் திரண்ட ராஜஸ்தான் மக்கள்!