குளிரிலும் வியர்க்கும் ஏழுமலையான்..! தெரியுமா இந்த அதிசயம்..?

First Published Jan 22, 2018, 1:58 PM IST
Highlights
thirupathi temple yelumalaiyaa sweats at 5 am


உலகின் பணக்கார தெய்வமாக பார்க்கப்படுவது திருப்பதி ஏழுமலையான் என்றே கூறலாம்...

ஆந்திரா,தமிழ்நாடு மட்டுமல்ல,உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து திருப்பதிக்கு படை எடுக்கும் பக்தர்கள் ஏராளம்..அதுவும் திருப்பதி சென்று வந்தாலே மாபெரும் விடிவு காலம் தான் என பலரும் நம்பி தரிசனம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

இதை எல்லாம் அறிந்த நம்மவர்களுக்கு,திருப்பதி ஏழுமலையான் பற்றி மேலும் பல அறிய தகவலை பார்க்கலாம்...

250  கோடி வருடம்

250  கோடி வருடம் முன்பே சிலாதோரணம் என்ற அபூர்வ பாறையால் உருவான  மலை தான் திருப்பதி ஏழுமலையான் கோவில்.

குளிரிலும் வியர்க்கும் ஏழுமலையான்...

ஏழுமலையான் சிலை உண்மையில் வியர்க்கிறது.அதிலும் மிக முக்கியமான ஒன்று என்னவென்றால்,அதிகாலை 4.30  மணிக்கு குளிர்ந்த நீர்,பால் மற்றும் பல திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்ட அரை மணி நேர்த்தில் வியர்த்து ஊத்துகிறது என்பது தான்.

குறிப்பாக அதிகாலை 5 மணிக்கு,ஏழுமலையானுக்கு அதிக அளவில் வியர்க்குமாம்....
அதுவும் 20  டிகிரி குளிரில் ஏழுமலையானுக்கு வியர்கிறது என்றால் அற்புதத்தை பாருங்களேன்...

click me!