திமுக அரசை மறைமுகமாக அச்சுறுத்தும் பாஜக அரசு.! திருமாவளவன் அதிரடி

Published : Mar 14, 2025, 08:27 AM IST
திமுக அரசை மறைமுகமாக அச்சுறுத்தும் பாஜக அரசு.! திருமாவளவன் அதிரடி

சுருக்கம்

டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை குறித்து திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். தலித் இளைஞர் கொலை குறித்து பேசிய அவர், அரசு சிறப்பு புலனாய்வு பிரிவை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

TASMAC scam : தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவன தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் சுமார் ஆயிரம் கோடி அளவிற்கு முறைகேடுகள் நடைபெற்றதற்கான ஆவணங்கள் சிக்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் டெல்லி, சத்தீஸ்கரை தொடர்ந்து தமிழகத்தில் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை அமலாக்கத்துறை ஸ்கெட்ச் போட்டுள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டது. 

ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: 17ஆம் தேதி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்

 இளைஞர்கள் மீதான தாக்குதல்

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். மதுரையில்  சிலைமான் பகுதியில் அழகர்சாமி என்ற தலித் இளைஞர் 8பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் உயிரிழந்த இளைஞரின் உடலுக்கு திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தலித் இளைஞர்கள் மற்றும் சாதிய மனப்பான்மையோடு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக கூறினார். 

சிறப்பு புலனாய்வு பிரிவு

ஏற்கனவே ஸ்ரீவைகுண்டத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவன் சிகிச்சை பெறுகிறார். மதுரையில் தலித் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தலித் மக்கள் மீதான தாக்குதலை தமிழக அரசு அதித கவனத்துடன் கையாள வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் சாதியின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க அரசு சிறப்பு புலனாய்வு பிரிவை அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து டாஸ்மாக் நிறுவனத்தில் 1000 கோடி ரூபாய் முறைகேடு என அமலாக்கத்துறை அறிக்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்,  

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல்: அமலாக்கத்துறை அறிக்கை

மறைமுகமாக அச்சுறுத்தல்

அமலாக்கத்துறை சோதனையில் என்ன நடந்தது என தெரியவில்லை. முறைகேடு நடந்திருந்தால் அமலாக்கத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கத்தான் செய்வார்கள் என கூறினார். அதே நேரத்தில்  தமிழ்நாடு அரசை மறைமுகமாக அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் இந்திய ஒன்றிய அரசு ஈடுபட்டு வருவதை கவனத்தில் கொள்ள வேண்டியது உள்ளது எனவும் டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டு உண்மையாக இருக்குமானால் சட்டப்பூர்வமாக அணுகுவார்கள் என திருமாவளவன் கூறினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!