திருமாவளவனுக்கு ஆதரவாக களமிறங்கிய பா.ரஞ்சித்! உடனே பாதுகாப்பு கொடுங்க! தமிழக அரசுக்கு கோரிக்கை!

Published : Oct 10, 2025, 09:33 PM IST
Thirumavalavan and Pa.Ranjith

சுருக்கம்

உயர்நீதிமன்றம் அருகே நடந்த சம்பவம் தனக்கு எதிராக பாஜக, ஆர்எஸ்எஸ்ஸின் திட்டமிட்ட சதி என்று திருமாவளவன் கூறியிருந்த நிலையில், அவருக்கு இயககுநர் பா.ரஞ்சித் ஆதரவு தெரிவித்துள்ளார்.

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் அருகே தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருமாவளவன் சென்ற கார், முன்னாள் சென்ற ஒரு ஸ்கூட்டர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதை அந்த ஸ்கூட்டரை ஓட்டி வந்த வழக்கறிஞர் தட்டிக்கேட்டபோது, திருமாவுடன் வந்தர்கள் வழக்கறிஞரை சரமாரியாக தாக்கினார்கள்.

வழக்கறிஞரை தாக்கிய விசிகவினர்

இது தொடர்பான வீடியோ வைரலாகி பலரும் திருமாவளவனை விமர்சித்தனர். தமிழக பாஜக முன்னாள் முதல்வர் அண்ணாமலையும் திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்துக்கு விளக்கம் கொடுத்த திருமாவளவன், அந்த நபர் வேண்டுமென்றே காருக்கு முன்னாள் ஸ்கூட்டரை நிறுத்தி வம்பிழுத்ததாகவும் விசிகவினர் அவரை தாக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் சதி

இதன்பின்பு இது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் சதி என்று திருமாவளவன் குற்றம்சாட்டினார். ''உயர்நீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் -07 அன்று எனது காரை வழிமறித்த நிகழ்வு 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி' என்பது தெரியவருகிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இதன் பின்னணியில் உள்ளனர் என்றும் எமது விசாரணையில் உறுதிபட தெரிகிறது.

பின்னணியில் உள்ள சதி

எனவே, தமிழ்நாடுஅரசு இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்திட வேண்டும். பின்னணியில் உள்ள சதியினைக் கண்டறிய வேண்டும். அத்துடன், உடனடியாக இதனை ஒளிபரப்பு செய்த தனியார் தொலைகாட்சிகளைச் சார்ந்தவர்களையும் முழுமையாக அய்யமற விசாரித்திடவேண்டுமென கோருகிறோம்'' என்று கூறியிருந்தார்.

திருமாவுக்கு ரஞ்சித் ஆதரவு

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் திருமாவளவனுக்கு ஆதரவு கொடுத்த பா.ரஞ்சித், அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பா.ரஞ்சித், ''உயர்நீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் -07 அன்று காரை வழிமறித்த நிகழ்வு 'தற்செயலாக நடந்தது அல்ல.

உடனே பாதுகாப்பு கொடுங்கள்

திட்டமிட்டசதி என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதை கவனத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்''என்று கூறியுள்ளார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அட! 2026 தேர்தலுக்கு இப்போதே ரெடி! நாம் தமிழர் கட்சியின் 100 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சீமான்!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!