அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி காணப்படுகிறது. இத்துடன் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடும காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்ளில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
டிசம்பரில் நாடாளுமன்றத் தேர்தல்.? திட்டமிடும் மோடி, அமித்ஷா.! திமுகவினரை அலர்ட் செய்யும் டி.ஆர்.பாலு
முன்னதாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் வானிலை மையம் தெரிவித்தது.