மதுரை வீரன் வீதி உலா: ஐந்து முக்கிய நோக்கம் - அண்ணாமலை!

By Manikanda Prabu  |  First Published Jul 2, 2023, 5:31 PM IST

சமூக ஒற்றுமை வலியுறுத்தி மதுரை வீரன் வீதி உலா 2023 துவக்க விழாவில், மதுரை வீரன் தேரை வடம் பிடித்து இழுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீதி உலா வந்தார்


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ் மண்ணின் பெருமைக்குரிய மதுரை வீரன் சரித்திரம் மற்றும் சிறப்புகளை உலகறிய செய்யும் நிகழ்ச்சியாக மதுரை வீரன் வீதி உலா 2023 வேள்வி நிகழ்ச்சி தாராபுரம் காமராஜபுரம் வடக்கு தெரு பகுதியில்  தொடங்கியது.

சமுக மற்றும் ஆன்மீக ஆர்வலர் ஆற்றல் அசோக்குமார் ஏற்பாட்டில்  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று மதுரை வீரன் தேருடன் வீதி உலா வந்தார். அதில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tap to resize

Latest Videos

மதுரை வீரன் வீதி உலா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது, “சமூக ஒற்றுமை, நமது கலாச்சாரம், சமூக பாதுகாப்பு, சமூக ஒழுக்கம், பாகுபாடு அற்ற சமூகம் என ஐந்து முக்கிய குறிக்கோள்களை நோக்கமாக கொண்டு மதுரை வீரன வீதி உலா திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் பொதுமக்கள் ஆன்மீகப் பெரியோர்கள் பங்களிப்போடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் விருந்தினர்கள் நமது பாரம்பரியம் மற்றும் வாழ்க்கை முறையில் மதுரை வீரன் பங்கு பற்றி பேசுகிறார்கள்.” என்றார்.

நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆனி பெருந்திருவிழா - விமர்சையாக நடைபெற்ற திருத்தேரோட்டம்!

 மதுரை வீரன் தங்கத்தேரில் 150 நாட்கள் தொடர் பயணமாக செல்வதாக தெரிவித்த அண்ணாமலை, “2 ஆயிரத்து 500 கிலோமீட்டர் பயணித்து ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பொதுமக்களும் மதுரை வீரனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகங்கள் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நம்மை காக்க வருகிறார் நம் காவல் தெய்வம் மதுரை வீரனுக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளிக்க தயாராகி வருகின்றனர். பொதுமக்கள் திரளாக பங்கேற்று மதுரை வீரன் ஆசி பெற வேண்டும்.” என வேண்டுகோள் விடுத்தார்.

இந்த ஆன்மீக பயணத்தில் மதுரை வீரன் சிறப்புகளை விளக்கும் குறும்படம் நாட்டுப்புற கதைகள் மற்றும் வீர பாடங்கள் ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்மீக விதி உலா துவக்க வேள்வியாக 108 யாகங்கள் நடைபெறுகிறது. யாக பூஜையில் பங்கேற்கும் பொது மக்களுக்கு காப்பு மற்றும் விளக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது. 6 அடிஉயரத்தில் தங்கத்தேரில் வீர வாழுடன் மதுரை வீரன் தேரில் வலம் வருகிறார். தாராபுரத்தில் துவங்கும் இந்த ஆன்மீகப் பயணம் தொடர்ந்து காங்கேயம், மொடக்குறிச்சி, ஈரோடு கிழக்கு, மேற்கு மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் ஒவ்வொரு விதியாக சுமார் 500 கிராமங்கள் பயணிக்கவுள்ளது.

click me!