
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஆந்திரத்தில் இருந்து தமிழகத்திற்கு வெப்பம் வீசுகிறது. ஆந்திராவில் தொடர்ந்து வெப்பநிலை இயல்பை விட அதிக நிலையில் உள்ளது.
கடலோர மாவட்டங்களில் இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உள்மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்.
அதிக பட்சமாக தக்கலை, தாளவாடியில் 6 செ.மீ மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மே 1 முதல் 19 வரை இயல்பையொட்டி கோடை மழை பெய்துள்ளது. கடலோரம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.