
டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடும் பொதுமக்கள் மீது வழக்கு பதிவு செய்ய கூடாது என நீதிமன்றம் அறிவுறித்தியுள்ள நிலையில் வேலூரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.
டாஸ்மாக் கடைக்கு எதிராக பொதுமக்கள் அங்காங்கே போராட்ட களத்தில் குதித்து வருகின்றனர். இதனால் நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்றிய மதுபானக்கடைகளை எங்கே நிரந்தரப்படுத்துவது என தமிழக அரசு அல்லல் பட்டு வருகிறது.
இதனிடையே பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் சூரையாடபடுகின்றன. இதைதொடர்ந்து நீதிமன்றத்திலும் பொதுநல வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மதுக்கடைக்கு எதிராக போராடும் மக்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யகூடாது எனவும் தடியடி நடத்த கூடாது எனவும் அறிவுறுத்தியிருந்தது.
மேலும் தமிழக அரசு பதிலளிக்கையில், மக்கள் விரும்பாத இடத்தில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை என தெரிவித்தது.
இந்நிலையில், வேலூர் மாவட்டம் அழிஞ்சிகுப்பம் பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிராக ஏராளமான மக்கள் திரண்டு டாஸ்மாக் கடையை சூறையாடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் ஏராளமான பெண்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தும் காவல்த்துறை இவ்வாறு நடந்து கொண்டிருப்பது நீதித்துறையை அவமதிப்பது போன்ற செயலா? என கருத தோன்றுகிறது.