விரைவில் கைதாகிறார் தமிழக அரசு ஆலோசகர் - பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு

 
Published : May 19, 2017, 12:07 PM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
விரைவில் கைதாகிறார் தமிழக அரசு ஆலோசகர் - பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு

சுருக்கம்

TN government advisor pawan raina resigned the post

அதிமுகவில் இரு அணிகள் பிரிந்துள்ளதால், இரட்டை இலை சின்னம் பெற தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக டிடிவி.தினகரன், தேர்தல் ஆணையத்துககு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பாக இடை தரகர் சுகேஷ் சந்திரா, நரேஷ் உள்பட சிலரையும் டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

பண பரிவர்த்தனையின்போது, அவர்கள் செல்போனில் பேசிய உரையாடலை போலீசார் கைபற்றியுள்ளனர். இதை தொடர்ந்து சில ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் இதில் சிக்குவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், டிடிவி.தினகரனுக்கு இடை தரகராக வேலை பார்த்ததாக தமிழக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பவன் ரெய்னா தற்போது, விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். இதுதொடர்பாக  கடந்த சில நாட்களுக்கு முன், பவன் ரெய்னாவிடம் போலீசார் விசரித்ததாக கூறப்படுகிறது.

தனது ஐஏஎஸ் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும், அதிமுகவில் ஆலோசகராக பணியில் சேர்ந்தார் பவன் ரெய்னா. அவர், டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ஜெயலலிதாவுக்கான ஆலோசகராக இருந்தவர்.

டெல்லியில் இருந்த பவன் ரெய்னா, ஜெயலலிதாவுக்கான அனைத்து, பணிகளையும் செய்து வந்தார்.  அவரது மறைவுக்கு பின்னர், சசிகலாவுக்கு அதே பணிகளை தொடர்ந்து செய்து வந்தார்.
 

PREV
click me!

Recommended Stories

100 கி.மீ. வேகம்.. விளம்பர பலகையில் பைக் மோதி பயங்கர விபத்து.. தலை துண்டாகி துடித்த மருத்துவ மாணவர்கள்
டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுவதா..? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பகிரங்க சவால்..!