
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 8ம் தேதி தொடங்கி 31ம் தேதி முடிவடைந்தது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதினர். இதில், 4 லட்சத்து 98 ஆயிரத்து 383 பேர் மாணவர்களும் 4 லட்சத்து 95 ஆயிரத்து 784 பேர் மாணவிகளும் தேர்வு எழுதினர்.
இவர்கள் தவிர தனித் தேர்வர்கள் 39 ஆயிரத்து 741 பேரும் எழுதியுள்ளனர்.இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 94.4 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் விருதுநகர் மாவட்டம் 98.55 % தேர்ச்சி விகிதம் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது.
கன்னியாக்குமரி 98.17 % தேர்ச்சி விகிதம் பெற்று இரண்டாவது இடத்தையும், 98.16 % தேர்ச்சி விகிதம் பெற்று ராமநாதபுரம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.