கடலுக்கு அடியில் ராமர் பாலம் இல்லை.. மத்திய அரசு கொடுத்த அதிர்ச்சி தகவல் - அன்றே கணித்தார் கருணாநிதி!

By Raghupati R  |  First Published Dec 23, 2022, 9:02 PM IST

ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது. இஸ்ரோ செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்ததில் பாலம் இருந்தது என துல்லியமாக கூற முடியவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.


இந்தியாவின் இராமேஸ்வரம் தீவுக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடைப்பட்ட மன்னார் வளைகுடாக் கடலில் காணப்படும் மணற்திட்டுகள்தான் 'ராமர் பாலம்' என்று சொல்லப்படுகிறது.

இந்துமத நம்பிக்கையின்படி, இலங்கையில் சிறைவைக்கப்பட்டிருந்த சீதையை மீட்க, ராமனின் வானரப்படை இலங்கை செல்வதற்கான வழியாக இந்த பாலம் கடல்மீது உருவாக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது.இந்தியாவில் ராமர் பாலம் என்று குறிப்பிட்டாலும் சர்வதேச அளவில் ஆதாம் பாலம் என்ற பெயரிலும் குறிப்பிடப்படுகிறது. 48 கிலோ மீட்டம் நீளம் கொண்ட இந்தப் பாலம் சுண்ணாம்புக் கற்களால் ஆனது.

Tap to resize

Latest Videos

undefined

இந்து நம்பிக்கைகளைப் பின்பற்றும் மக்கள் இதனை புனிதப் பகுதியாக கருதுகின்றனர். வால்மீகி எழுதிய ராமாயணத்திலும் ராமர் பாலம் குறித்த விவரங்கள் உள்ளன என்று கூறப்படுகிறது. இந்தப் பாலம் எப்படி உருவானது என்று அறிவியல்பூர்வமாக இதுவரையில் நிறுவப்படவில்லை. இந்த நிலையில் மத்திய அரசு ராமர் பாலம் குறித்து புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. 

நாடாளுமன்றத்தில் எம்.பி கார்த்திகேய சர்மா, ராமர் பாலம் பற்றிய ஆய்வு முடிவுகள் பற்றி கேள்வி எழுப்பினார். எம்.பி கார்த்திகேய சர்மா கேள்விக்கு விண்வெளி மற்றும் அறிவியல் தொழிநுட்பத்துறை இணை அமைச்சர் ஜிஜேந்திர சிங் பதில் அளித்துள்ளார். அதற்கு பதில் அளித்துள்ளார் அமைச்சர் ஜிஜேந்திர சிங்.

நாடாளுமன்றத்தில் பதில் அளித்து பேசிய அவர், பண்டைய காலம் பற்றிய தகவல்களை கண்டறிய நவீன தொழிநுட்பங்களை பயன்படுத்தி ஆய்வுகள் நடத்தப்படுகின்றது. தொழிநுட்பங்களை பயன்படுத்தி ஹரப்பா நாகரிகம் பற்றிய தகவல்களை கண்டுபிடித்துள்ளோம். சுமார் 18,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு என்பதால் ராமர் பாலம் பற்றிய தகவல்களை கண்டறிவதில் சிக்கல்கள் உள்ளது.

இதையும் படிங்க..காது கேட்கும் கருவி 10 ஆயிரம் இல்லை.. 350 தான்! கடைசியாக ஒத்துக்கொண்ட அண்ணாமலை!

வரலாற்றின்படி 56 கி.மீ நீளத்துக்கு பாலம் இருந்ததாக நாம் கருதுகிறோம். இருப்பினும் தொடர்ச்சியாக காணப்படும் சுண்ணாம்புக்கல் திட்டுகளை கொண்டு சில முடிவுகளுக்கு வரக்கூடும். ஒரே வாக்கியத்தில் கூறுவதென்றால் ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதை கூறுவது கடினம். இந்த செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் ராமர் பாலம்தான் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறினார். 

ராமர் பாலம் இருந்ததாக கூறி சேது கால்வாய் திட்டத்தை இந்துத்துவ அமைப்புகள் பல வருடங்களாக எதிர்த்து வருகின்றன. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் பாஜக அமைச்சர் ராமர் பாலம் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்று கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

ராமர் பாலத்தை தேசிய புராதான சின்னமாக அறிவிக்க வேண்டும் என பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ராமர் பாலம் என்ற ஒன்று இல்லை என்று கூறிய பழைய வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க..ஏக்நாத் ஷிண்டே முதல் ரிஷி சுனக் வரை.. 2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட அரசியல்வாதிகள்!

click me!