ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 8 பேருக்கு பதவி உயர்வு... உத்தரவிட்டது தமிழக அரசு!!

By Narendran S  |  First Published Dec 23, 2022, 8:45 PM IST

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேர் கூடுதல் தலைமைச் செயலாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.


தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேர் கூடுதல் தலைமைச் செயலாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். தமிழக அரசின் ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேருக்கு பதவி உயர்வு அறிவித்து தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, குமார் ஜெயந்த், ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேர் கூடுதல் தலைமைச் செயலாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க: பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இல்லை; கடலூரில் விவசாயிகள் சாலை மறியல்

Latest Videos

உணவு மற்றும் கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளராக உள்ள ஜெ. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கூடுதல் தலைமை செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக உள்ள குமார் ஜெயந்த், போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளராக உள்ள கே.கோபால், Tangedco தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக உள்ள ராஜேஷ் லக்கானி ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: டெல்லியில் நாளை ராகுல் காந்தி யாத்திரை… கமல்ஹாசன் பங்கேற்பதாக அறிவிப்பு!!

இதேபோல், தகவல் தொழில்நுட்பம் & டிஜிட்டல் சேவை துறை முதன்மைச் செயலாளராக உள்ள நீரஜ் மிட்டல், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளராக உள்ள மங்கத்ராம் ஷர்மா உள்ளிட்ட 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலராக பதவி உயர்வு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

click me!