சாப்பாடு நல்லா இருக்கா? மாணவர்களுக்கு உணவு பரிமாறி ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி

By Velmurugan sFirst Published Dec 23, 2022, 6:20 PM IST
Highlights

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து மாணவர்களுக்கு உணவு பரிமாறினார்.
 

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று காலை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

திண்டுக்கல் மேற்கு ரத வீதியில் உள்ள திண்டுக்கல் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி குழந்தைகள் பாடத்திட்டத்தில் உள்ள பாடலை பாடினர். பள்ளியில் அமைச்சர் குழந்தைகளுக்கு காலை உணவு பரிமாறி, உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். பள்ளி வளாகம் துாய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை பார்வையிட்டு, சுகாதார வளாகத்தையும் பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தை அமைச்சர் பார்வையிட்டார். அங்கு வீராங்கனைகள் விடுதி, மாணவிகள் தங்கும் அறைகள், சமையலறை, உணவு வகைகளை பார்வையிட்டு, மாணவிகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், உணவு வகைகளின் தரம் ஆகியவை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து நீச்சல் குளத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வீராங்கனைகளுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

click me!