வருகிற 11.11.2022-ம் தேதி பாரத பிரதமர் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள காந்திகிராமம், பல்கலைக்கழத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ளார்.
பிரதமர் மோடி நாளை திண்டுக்கல் வர உள்ள நிலையில் இன்றும், நாளையும் மதுரை - திண்டுக்கல் பிரதான சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- வருகிற 11.11.2022-ம் தேதி பாரத பிரதமர் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள காந்திகிராமம், பல்கலைக்கழத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ளார். இதில், தமிழக முதல் அமைச்சர் மற்றும் தமிழக கவர்னர் ஆகியோர் உடன் கலந்து கொள்ளவுள்ளனர். மேற்படி விழாவிற்கு 11.11.2022-ம் தேதி பாரத பிரதமர் அவர்கள் மதுரையில் இருந்து திண்டுக்கலிற்கு சாலை மார்க்கமாக செல்வயிருப்பதால், இதன் பொருட்டு வருகின்ற 10.11.2022-ம் தேதியன்று பாதுகாப்பு முன்னோட்டம் நிகழ்வு நடைபெற இருக்கின்றது.
undefined
இதையும் படிங்க;- பிரதமர் மோடியின் பயண விவரமும், நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ள திட்டங்களும்... முழு விவரம் உள்ளே!!
எனவே வருகின்ற 10.11.2022-ம் தேதியன்று மதியம் 01.00 மணி முதல் மாலை 05.00 பணி வரையிலும், மற்றும் 11.11.2022-ம் தேதியன்று காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையிலும், பிற மாவட்டங்களில் இருந்து மதுரை, திண்டுக்கல் பார்க்கமாக செல்லும் வாகனங்கள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து கீழ்கண்ட மாற்று பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* மதுரை மாநகரில் இருந்து திண்டுக்கல் செய்வதற்கு மதுரையில் இருந்து அலங்காநல்லூர், பாலபேடு, இராஜாக்கால்பட்டி, முளையூர், நரசிங்கபுரம் வழியாக திண்டுக்கல் செல்லவேண்டும்.
அல்லது
மதுரையில் இருந்து பாத்திமா கல்லூரி வழியாக அலங்காநல்லூர் கேட்டுக்கடை, எம்.சத்திரப்பட்டி, நத்தம், வழியாக திண்டுக்கல் செல்லவேண்டும்.
* மதுரை மாநகரில் இருந்து தேனி செல்வதற்கு பாத்தியா கல்லூரி வழியாக பரவை சமயநல்லூர் (நான்கு வழிச்சாலை பாலத்தின் கீழ்), தேனூர் ரோடு மேலக்கால், செக்கனூராணி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி வழியாக தேனி செல்லவேண்டும்.
* இராஜபாளையத்தில் இருந்து திண்டுக்கல் செல்வதற்கு தே.கல்லுப்பட்டி சந்திப்பில் இருந்து பேரையூர், சேடப்பட்டி, உசிலம்பட்டி, வத்தலக்குண்டு, செம்பட்டி வழியாக திண்டுக்கல் செல்ல வேண்டும்.
* இராஜபாளையத்தில் இருந்து மதுரை மாநகருக்கு செல்வதற்கு கள்ளிக்குடி சந்திப்பில் இருந்து காரியப்பட்டி, ஆவியூர், பாரப்பத்தி, எலியார்பத்தி டோல் கேட், வலையங்குளம் சந்திப்பு, சோழன்குருனி சந்திப்பு, விராதனூர், சிந்தாமணி டோல் கேட் வழியாக மதுரை மாநகருக்குள் செல்ல வேண்டும்.
* திருச்சியில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு செல்வதற்கு இராமநாதபுரம் ரிங்ரோடு சந்திப்பின் இருந்து திருப்புவனம், அல்லிநகரம் சந்திப்பு, புல்வாய்கரை சந்திப்பு, தொட்டியங்குளம் சந்திப்பு, திம்மாபுரம், முஸ்டக்குறிச்சி, மீனாட்சிபுரம், காரியப்பட்டி வழியாக திருநெல்வேலி செல்ல வேண்டும்.
* திருநெல்வேலியில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் கள்ளிக்குடி சந்திப்பில் இருந்து காரியப்பட்டி, எலியார்பத்தி டோல்கேட், வளையங்குளம் சந்திப்பு, சிந்தாமணி மற்றும் மதுரை மாநகர் பகுதியில் உள்ள டோல் கேட் வழியாக செல்லவேண்டும்.
* விருதுநகரில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் கள்ளிக்குடி சந்திப்பில் இருந்து காரியாபட்டி, எலியார்பத்தி டோல்கேட், வளையங்குளம் சந்திப்பு, சிந்தாமணி மற்றும் மதுரை நகர் பகுதியில் உள்ள டோல் கேட் வழியாக செல்லவேண்டும்.
* திருநெல்வேலி மற்றும் விருதுநகரில் இருந்து திண்டுக்கல் மற்றும் பழனி செல்லும் வாகனங்கள் கள்ளிக்குடி சந்திப்பில் தே.கல்லுப்பட்டி பேரையூர்
சந்திப்பு, உசிலம்பட்டி சந்திப்பு, உசிலம்பட்டி, வத்தலக்குண்டு வழியாக திண்டுக்கல் செல்ல வேண்டும்.
அல்லது
கள்ளிக்குடி, சிவரக்கோட்டை, உசிலம்பட்டி சந்திப்பு, உசிலம்பட்டி, வத்தலக்குண்டு வழிவாக திண்டுக்கல் செய்ய வேண்டும்.
* மதுரை நகரில் பகுதியில் இருந்து திண்டுக்கல், வத்தலக்குண்டு, பெரியகுளம், கொடைக்கானல் மற்றும் கோயம்புத்தூர் செல்லும் வாகனங்கள் மதுரையில் இருந்து பாத்திமா கல்லூரி வழியாக பரவை, சமயநல்லூர், கேனூர், சோழவந்தான், கரப்பட்டி, பள்ளப்பட்டி, நிலக்கோட்டை மற்றும் செம்பட்டி வழியாக செல்ல வேண்டும்.
* விருதுநகர், திருநெல்வேலி, செங்கோட்டையில் இருந்து திண்டுக்கல் மற்றும் தேனி செல்லும் வாகனங்கள் திருமங்கலம் உசிலம்பட்டி ரோடு சந்திப்பில் இருந்து சிந்துப்பட்டி, தி.விலக்கு, உசிலம்பட்டி வழியாக செல்லவேண்டும்.
மேற்கண்ட வழிதடம் வழியாக செல்லவேண்டும் எனவும், எக்காரணம் கொண்டும் மதுரை மாநகருக்குள் செல்லக்கூடாது என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- பிரதமர் வருகையை முன்னிட்டு திண்டுக்கல்லில் பலத்த பாதுகாப்பு... நவ.10, 11ம் தேதிகளில் டிரோன் பறக்க தடை!!