பிரதமர் வருகையை முன்னிட்டு திண்டுக்கல்லில் பலத்த பாதுகாப்பு... நவ.10, 11ம் தேதிகளில் டிரோன் பறக்க தடை!!

By Narendran S  |  First Published Nov 10, 2022, 12:21 AM IST

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு திண்டுக்கல்லில் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 


பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு திண்டுக்கல்லில் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு முடிவுற்ற பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கவும், சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் வரும் 10 மற்றும் 11 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலாங்களுக்கு செல்ல உள்ளார்.

இதையும் படிங்க: சிறந்த சீர்திருத்த மாநிலமாக தமிழகம் தேர்வு... தமிழக அரசுக்கு டெல்லியில் விருது!!

Tap to resize

Latest Videos

undefined

குறிப்பாக தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் நடைபெறும் திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டு உரையாற்றுகிறார். இதற்காக நவ.11 ஆம் தேதி பிரதமர் மோடி பெங்களூரில் இருந்து தமிழகம் வருகிறார்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தொடர்பான வழக்கு... தமிழக அரசின் முடிவை கேட்ட உயர்நீதிமன்றம்!!

பின்னர் திண்டுக்கல்லில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பார் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே பிரதமரின் வருகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி, காந்தி கிராமம், அம்பாத்துரை, அம்மைநாயக்கனூர், செம்பட்டி ஆகிய பகுதிகளில் நவம்பர் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

click me!