வங்கியில் டெபாசிட் செய்த பணம்..! மாறுகிறது திட்டம்..!

First Published Jan 3, 2018, 5:58 PM IST
Highlights
there is a smal changes in deposit the money on bank


வங்கி கணக்கில் டெபாசிட் செய்துள்ள பணம் குறித்த முக்கிய தகவல் தற்போது  வெளியாகி உள்ளது

அதாவது நிதி தீர்மானம் மற்றும் வைப்புத்தொகை காப்புறுதி மசோதாவானது விரைவில் அமலுக்கு வர வாய்ப்புள்ளதால்,வங்கி கணக்கில் டெபாசிட் செய்துள்ள பணத்தை பற்றி மக்கள் கவலை பட தொடங்கி உள்ளனர்.

1 லட்சத்திற்கு மட்டுமே உறுதி..!

வங்கியில் நாம் டெபாசிட் செய்து வைத்துள்ள பணம் தொடர்பாக, டன் உத்தரவாத கூட்டுஸ்தாபன சட்டம், 1961-ன் கீழ் 1 லட்சம் ரூபாய் வரையில் உள்ள பணத்திற்குக் காப்பீடு அளிக்கப்படுகிறது.

அதாவது வங்கியில் பல லட்சம் டெபாசிட் செய்து வைத்திருந்தால், ஒரு வேளை வங்கி  கடைசியில் திவாலாகி விட்டால்,பல லட்சம் டெபாசிட் செய்திருந்தாலும்,அவர்களுக்கு  ஒரு லட்சம் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய எப்ஆர்டிஐ மசோதா

தற்போது மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய எப்ஆர்டிஐ என்ற புதிய மசோதா மூலம்,காப்பீடு பணத்தினை உயர்த்தி தர திட்டமிடப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது

இந்த மசோதா நிறைவேற்றப்படும் நிலையில்,25 ஆண்டு காலம் கழித்து இந்த  மாற்றத்தை கொண்டு வந்த பெருமையை அடையும்.

மேலும், இந்த மசோதா மூலம்,12 மடங்கு காப்பீட்டு தொகையை  உயர்த்த திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது  

இதன் மூலமாக வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் பெருமளவில் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டு  உள்ளது.
 

click me!