
சென்னையில் 2 இடங்களில் வீட்டு உரிமையாளர்கள் வெளியே சென்றிருந்த நிலையில் உள்ளே புகுந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள பணம் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளனர்.
சென்னை விருகம்பாக்கம்,சாலிகிராமம் பகுதியை சேர்ந்தவர் சபீஷ்(35). தொழிலதிபரான இவர் நேற்று தன் வீட்டை பூட்டி விட்டு பக்கத்து தெருவில் உள்ள நண்பர்களை பார்க்க சென்றார்.
பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்த போது அவர் வீட்டில் வேறு பூட்டு போடப்பட்டுள்ளதை பார்த்துள்ளார்.
பூட்டை திறக்க முடியாமல் உடைத்து உள்ளே திறந்து பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
வீட்டில் இருந்த பீரோவை உடைத்த மர்ம ஆசாமிகள் 40 பவுன் தங்க நகைகள்,ரூ. 90,000 ரொக்க பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.
உடனடியாக இது பற்றி விருகம்பாக்கம் போலீசில் புகாரளித்தார்.
புகாரை பெற்ற போலீசார் சம்பவ இடத்துக்கு வந்த போது விசாரணை நடத்தினர்.
இதே போல் கொளத்தூர் பாலகுமாரன் நகறை சேர்ந்த பிரகாஷ் (44) அவரது குடும்பத்தினருடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்று விட்டு நேற்று வீடு திரும்பினார்.
அப்போது அவர் வீட்டின் பூட்டு உடைக்கபட்டு வீட்டில் இருந்த 6 பவுன் தங்க நகை ஒரு கிலோ வெள்ளி, கலர் டிவி, கேஸ் சிலிண்டர், ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து அவரளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.