
கடலூர் மாவட்டம் முத்தாண்டிகுப்பம் புதுகாலனியை சேர்ந்தவர் ஜெயசங்கர் இவரது மகன் ஜெயபிரகாஷ் (15). அதே பகுதியில் உள்ள என்.எல்.சி. பள்ளியில் 10ம் வகுக்கு படித்து வந்தார்.
இன்று காலை ஜெயபிரகாஷ், பள்ளிக்கு சென்றான். மதியம் சுமார் 12 மணியளவில், மாணவர்கள், உணவு இடைவேளைக்கு சென்றபோது, பள்ளியின் வளாகத்தில் கழுத்தில் கத்தி குத்து காயத்துடன் ஜெயபிரகாஷ் சடலமாக கிடந்தான். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.
தகவலறிந்து முத்தாண்டிகுப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். சடலத்தை கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.