108 ஆம்புலன்சில் சுகப்பிரசவம் பார்த்த பெண் மருத்துவ உதவியாளர்; தாயும், சேயும் நலம்…

Asianet News Tamil  
Published : Feb 27, 2017, 12:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
108 ஆம்புலன்சில் சுகப்பிரசவம் பார்த்த பெண் மருத்துவ உதவியாளர்; தாயும், சேயும் நலம்…

சுருக்கம்

women medical assistant attend the pregnant women and delivered a boy baby.

காஞ்சிபுரத்தில், பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு, பெண் மருத்துவ உதவியாளர் 108 ஆம்புலன்சின் உள்ளேயே சுகப்பிரசவம் பார்த்ததில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்வரி. இவர் நிறைமாத கர்பிணியான இருந்தார். வீட்டில் இருக்கும்போது, பிரசவவலி ஏற்ப்பட்டதால் 108 அவசர ஊர்தியை அழைத்துள்ளார்.

பிரசவ வலி அதிகமானதால், துடித்துடித்த ராஜேஸ்வரிக்கு, ஆம்புலன்ஸில் வந்த பெண் மருத்துவ உதவியாளர் ஆர்.சிந்துஜா பிரசவம் பார்த்தார்.

அதில், அவருக்கு ஆம்பூலன்சிலையே அழகிய ஆண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் எடை 2.6 கிலோ இருந்தது. பிறகு, தாயும், சேயும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், தாயும் சேயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்

பெண் மருத்துவ உதவியாளரின் சமயோஜித புத்தியால் தாயும், சேயும் காப்பற்றப்பட்டு உள்ளனர்.

மேலும், ஆம்புலன்சின் உள்ளேயே சுகப்பிரசம் பார்த்த சிந்துஜாவை அனைவரும் பாராட்டினர்.

PREV
click me!

Recommended Stories

குட்நியூஸ்.! மழைக்கு நாள் குறித்த வானிலை மையம்.. எந்தெந்த மாவட்டங்களில் விளாசப்போகுது தெரியுமா?
இதற்கு பதில் என்னை 20 துண்டுகளாக வெட்டியிருக்கலாம்.. அன்புமணி செயலால் மனம் உடைந்த ராமதாஸ்!