
கள்ளக் காதலால் உருவான கருவை கலைக்க, நாட்டு மருந்தை சாப்பிட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 10 வயதில் மகள் உள்ளார். கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பாக கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.
இந்நிலையில், கணவனை பிரிந்து இருக்கும் சுமதிக்கும் அதே ஊரைச்சேர்ந்த வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது இந்த தொடர்பு கள்ளக் காதலாக மாறியுள்ளது. இந்த கள்ளக் காதாலால் சுமதி ஆறு மாதம் கர்ப்பமானார். தமக்கு பத்து வயதில் மகன் இருக்கிறான், தான் கணவனோடு இப்போது இல்லை, இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் எல்லோரும் தவறாக பேசுவார்கள் என எண்ணிய சுமதி தனது வயிற்றில் வளரும் கருவை கலைக்க முடிவு செய்துள்ளார். சுமதி நாட்டு மருந்து மூலம் கருவை கலைக்க ஜெயலட்சுமி என்பவரை நாடினார்.
இதனையடுத்து, ஜெயலட்சுமி கொடுத்த நாட்டு மருந்தை சுமதி சாப்பிட்டார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் சுருண்டு விழுந்த சுமதி அங்கேயே இறந்தார். விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், கரு களைப்பு மருந்து அளவுக்கு அதிகமாக கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், போலீஸார் ஜெயலட்சுமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.