சென்னையை விட்டு காலி செய்த மக்கள்..3 நாட்களில் 4.80 லட்சம் பேர்...போக்குவரத்து துறை வெளியிட்ட ஷாக்கிங் தகவல்

Published : Oct 23, 2023, 12:43 PM IST
சென்னையை விட்டு காலி செய்த மக்கள்..3 நாட்களில்  4.80 லட்சம் பேர்...போக்குவரத்து துறை வெளியிட்ட  ஷாக்கிங் தகவல்

சுருக்கம்

தொடர் விடுமுறை காரணமாக தமிழக போக்குவரத்து துறை இயக்கிய சிறப்பு பேருந்து மூலம் கடந்த 3 நாட்களில் மட்டும் 4லட்சத்து 80ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வாழ வைக்கும் பூமி சென்னை

படித்த படிப்பிற்கு சொந்த ஊரில் வேலை கிடைக்காத காரணத்தால் வேலை தேடி பல்வேறு நகரங்களுக்கு இளைஞர்கள் செல்கின்றனர். அவர்களுக்கு வாழ வைக்கும் பூமியாக சென்னை திகழ்கிறது. படித்தவர்களுக்கு மட்டுமில்லாமல், படிக்காதவர்களுக்கும் வாழ்க்கை கொடுத்து முன்னேற்றும் ஊர் தான் சென்னை. இந்த சென்னையை நோக்கி தமிழகத்தில் குக்கிராமங்களில் இருந்து மட்டுமல்ல வட மற்றும் தென் மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவர்களை ஏமாற்றாமல் வாழ்க்கை நடத்துவதற்கு வழி வகுத்து கொடுத்து வருகிறது. இப்படிப்பட்ட சென்னையில் பூர்விகமாக கொண்டவர்களை விட வெளியூரில் இருந்து வந்தவர்களே அதிகம். 

தொடர் விடுமுறை- 5 லட்சம் பேர் பயணம்

சொந்த ஊரையும், குடும்பத்தையும் பிழைப்புக்காக சென்னை வந்தவர்கள் தொடர் விடுமுறை வந்தால் மட்டும் தங்களது சொந்தங்களை பார்க்க ஊருக்கு செல்வார்கள் அந்த வகையில், சனி, ஞாயிறு விடுமுறை இதனை தொடர்ந்து திங்கட்கிழமை ஆயுத பூஜை. செவ்வாய் கிழமை விஜயதசமி என 4 நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் சென்னையை தற்காலிகமாக காலி செய்து விட்டு லட்சக்கணக்கானோர் சொந்த ஊர் சென்றுள்ளனர்.  

முக்கிய ரெயில்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே விற்று தீர்ந்த்து விட்டதாலும்,  ஆம்னி பஸ்களில் பண்டிகை உள்ளிட்ட தொடர் விடுமுறை நாட்களை பயன்படுத்தி கூடுதல் கட்டண வசூலிப்பதால் அரசு பஸ்களில் பயணம் செய்யவே தற்போது அதிகம் பேர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

தமிழக அரசு அதிரடி நடவடிக்கை: தனியார் பேருந்துகளில் டிக்கெட் விலை குறைவால் பொதுமக்கள் மகிழ்ச்சி!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
இப்படியொரு ப்ளானா..? டபுள் ஸ்டாண்ட் விஜயின்..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!