முதல்வர் பெயரை கூறி மிரட்டுகிறாரா நரிக்குறவர் பெண் அஸ்வினி? காவல் நிலையத்தில் வியாபாரிகள் புகாரால் பரபரப்பு

By Ajmal KhanFirst Published Sep 19, 2022, 9:17 AM IST
Highlights

மாமல்லபுரத்தில் கடைகளில் 10ரூபாய்க்கு புரோட்டா கேட்டு கத்தியை காட்டி மிரட்டுவதாக நரிக்குறவர் பெண் அஸ்வினி மீது காவல் நிலையத்தில் வியாபாரிகள்  புகார் கொடுத்துள்ளனர்.

உணவு விடுதியில் பிரச்சனை செய்த அஸ்வினி

மாமல்லபுரத்தில் உள்ள பெருமாள் கோயிலில் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் அன்னதானத்தை சாப்பிடுவதற்காக  பூஞ்சேரி நரிக்குறவர் பகுதியை சேர்ந்த அஸ்வினி மற்றும் அதே சமூதாயத்தை சேர்ந்த மக்கள் சிலர் சென்றனர். ஆனால், அவர்கள் பந்தியில் அமர்ந்து சாப்பிடவிடாமல் கோயில் நிர்வாகத்தினரால் விரட்டி அடிக்கப்பட்டனர். இதையடுத்து, மனமுடைந்த நரிக்குறவப் பெண் அஸ்வினி தனக்கு நேர்ந்த கொடுமைகளை யூடியூப் வாயிலாக தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

அஸ்வினி வீட்டிற்கு சென்ற முதலமைச்சர்

இதனையடுத்து அமைச்சர் சேகர்பாபு, நரிக்குறவர் பெண்அஸ்வினியோடு கோயில் பந்தியில் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டார். இதனையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த பெண்ணை அழைத்து பேசினார்.  அஸ்வினியின் வீட்டிற்கும் முதலமைச்சர் சென்றிருந்தார். மேலும் நரிக்குறவ மக்களுக்கு உதவிகளையும் தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்டது. இதன் காரணமாக அஸ்வினி மிகவும் பிரபலமாக பேசப்பட்டார். 

ராமேஸ்வரத்தில் ஓபிஎஸ் குடும்பத்தினருடன் வழிபாடு.. என்ன காரணம் தெரியுமா? வெளியான தகவல்..!

கத்தியை காட்டி மிரட்டியதாக புகார்

இந்தநிலையில் மாமல்லபுரத்தில் உள்ள உணவு கடையில் 10 ரூபாய்க்கு சப்பாத்தி, புரோட்டா கேட்டு மிரட்டுவதாகவும், தர மறுத்தால் கத்தியை காட்டி அச்சுறுத்துவதாக அந்த பகுதியை சேர்ந்த வணிகர்கள் நரிக்குறவ பெண் அஸ்வினி மீது காவல் நிலையத்துல் புகார் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக உணவு கடை உரிமையாளர் சுலோச்சணா கூறுகையில், அஸ்வினி என்ற பெண் அடிக்கடி உணவு வாங்கி சாப்பிடுவார். சரியாக பணம் கொடுத்து வந்தார். திடீரென நேற்று 10ரூபாய்க்கு உணவு கொடுக்கும் படி பிரச்சனை செய்தார், தரமறுத்ததால் எனது கணவர் கழுத்தில் கத்தியை வைத்தாக மிரட்டியதாக தெரிவித்துள்ளார். எனவே அஸ்வினி மீது நடவடிக்கை எடுக்கும் படி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால்  ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.   

இதையும் படியுங்கள்

ஆ.ராசாவை கைவிட்ட திமுக.!ஆதரவாக சீமானை தொடர்ந்து களத்தில் இறங்கிய வேல்முருகன்.. இந்து அமைப்புகளுக்கு எச்சரிக்கை

 

click me!