என்னம்மா கண்ணு செளக்கியமா; ஆமாம்மா கண்ணு செளக்கியம் தான்... தனது ஸ்டைலில் பெரியாரை புழந்த சத்யராஜ்!!

By Narendran SFirst Published Sep 18, 2022, 11:01 PM IST
Highlights

பிறப்பால் தாழ்ந்தவன் என கூறி ஒதுக்கி வைக்கப்பட்டவர்களுக்காக போராடியவர் தான் தந்தை பெரியார் என நடிகர் சத்யராஜ் பெரியாருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

பிறப்பால் தாழ்ந்தவன் என கூறி ஒதுக்கி வைக்கப்பட்டவர்களுக்காக போராடியவர் தான் தந்தை பெரியார் என நடிகர் சத்யராஜ் பெரியாருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். திருச்சியில் உள்ள தந்தை பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தந்தை பெரியார் 144 வது பிறந்த நாள் விழா, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் 20 ஆம் ஆண்டு தொடக்க விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் மாணவர்கள் சங்க புரவலரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ், என்னம்மா கண்ணு செளக்கியமா என கேட்டால் ஆமாம்மா கண்ணு செளக்கியம் தான் என பிற்படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் பெண்களும் கூற முடிகிறதென்றால் அதற்கு காரணம் தந்தை பெரியார் தான்.

இதையும் படிங்க: அரசு பெண் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு.. ஒரு தலைக்காதலன் செய்த வெறிச்செயல்.. அதிர்ச்சி சம்பவம்

நமக்கு கேளிக்கைகளும், பொழுதுபோக்கும் தேவை தான் ஆனால் அதை விட முக்கியம் புரட்சியாளர்கள் குறித்து நாம் தெரிந்து கொள்வது. தன் வாழ்க்கை முழுவதும் சிக்கனமாக இருந்த பெரியார். 60 ஆண்டுகளுக்கு முன்பாகவே 5 லட்சம் ரூபாய் பணமும் 28 ஏக்கர் நிலமும் பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் கல்வி கற்க வேண்டும் என இந்த கல்லூரி அமைக்க  வழங்கினார். தந்தை பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்ததற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தேன். பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போடுவது, அதை உடைப்பது என சிலர் செய்கிறார்கள்.

இதையும் படிங்க: சாதாரண பயிர்களை விட மரப் பயிர்களில் 3 – 5 மடங்கு கூடுதல் லாபம்..! காவேரி கூக்குரல் கருத்தரங்கில் தகவல்

பெரியார் உயிரோடு இருந்திருந்தால் அது குறித்தேல்லாம் கவலைப்படாமல் செருப்பு மாலையை என் சிலைக்கு போடுவதற்கு பதிலாக எனக்கு போடுங்கள் என பெரியார் கூறியிருப்பார். அவர் வெறும் சிலை அல்ல அவர் ஒரு கோட்பாடு அவர் தத்துவம். பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பட்ட எந்த கஷ்டங்களையும் பெரியார் அனுபவிக்கவில்லை. பணக்கார வீட்டு குடும்பத்தில் பிறந்தவர் அவர், இருந்த போதும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தரையில் இறங்கி போராடியவர் தந்தை பெரியார். அவரின் கொள்கை மனிதாபிமானத்தின் உச்சம். பிறப்பால் தாழ்ந்தவன் என கூறி குறிப்பிட்டவர்களை ஒதுக்கி வைத்தார்கள். அவர்களுக்காக போராடியவர் தான் தந்தை பெரியார் என்று தெரிவித்தார். 

click me!