திரையரங்கங்களில் படங்கள் திரையிடப்படும் நேரத்தை இரவு 2 மணி வரை நீட்டிக்கனும் - திரையரங்க உரிமையாளர்

By Ajmal Khan  |  First Published Jul 21, 2023, 2:36 PM IST

திரையரங்கங்களில் திரைப்படங்கள் திரையிடப்படும் நேரத்தை இரவு 2 மணி வரை அதிகரிக்க வேண்டும் எனவும்,  திரைப்பட டிக்கெட் கட்டணத்தில் சேர்க்கப்படும் 8 சதவீத local body tax - ஐ நீக்க வேண்டும்  என தமிழக முதலமைச்சரை திரைப்பட தயாரிப்பாளர்கள் , விநியோகஸ்தர்கள் , திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் கூட்டாக சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். 


முதல்வரோடு சந்திப்பு

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் , தமிழ்நாடு திரைப்பட  விநியோகஸ்தர்கள் சங்கம் , தமிழ்த் திரைப்படத்  தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதனை தொடரந்து தலைமைச் செயலக வளாகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது பேசிய அவர்கள், திரையரங்கங்களில் 100 ரூபாய் வரையிலான டிக்கெட்களுக்கு  12 சதவீத வரியும் , 100 ரூபாய்க்கு மேற்பட்ட டிக்கெட்டுகளுக்கு 18 சதவீத வரியும் ஜிஎஸ்டி வரியாக விதிக்கப்படுகின்றது.  இவற்றுடன் கூடுதலாக தமிழ்நாடு அரசால் 8 விழுக்காடு வரி Local body tax (உள்ளாட்சி வரி) எனும் பெயரில்  விதிக்கப்படுகின்றது .

Tap to resize

Latest Videos

தியேட்டர் இயங்கும் நேரம் நீட்டிக்க வேண்டும்

கடந்த ஆட்சி காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அந்த 8 விழுக்காடு வரியை நீக்க வேண்டுமென தமிழக முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம். இந்த 8 விழுக்காடு வரி குறைக்கப்பட்டால் டிக்கெட் விலையும் 100 ரூபாய்க்கு 8 ரூபாய் குறையும் என தெரிவித்தனர்.மேலும் திரையரங்கங்களில் திரைப்படங்கள் திரையிடப்படும் நேரத்தை  காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை அதிகரிக்க வேண்டும் . தமிழ்நாட்டில் முன்பு 4000 திரையரங்குகள் இருந்த நிலையில் தற்போது ஆயிரம் திரையரங்கங்களாக குறைந்துவிட்டது.  ஆயிரம் இருக்கைகளைக் கொண்ட திரையரங்குகளில் கூட தற்போது 100 அல்லது 150 பார்வையாளர்கள்தான் வருகின்றனர் . எனவே ஒரே திரையுடன் உள்ள பெரிய திரையரங்கத்தை,

தமிழ் பெயர் படங்களுக்கு மானியம்

நான்கு திரைகள் வரை கொண்ட திரையரங்கமாக மாற்ற பொதுப்பணித்துறை சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவந்து அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.  இவ்வாறு ஒரு திரையை 3 அல்லது 4 திரைகளாக மாற்றினால் சிறுபட்ஜெட் படங்களை திரையிட கூடுதல் வாய்ப்பு கிடைக்கும் என யோசனை தெரிவித்தனர். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் மானியமும் ,  வரிவிலக்கு சலுகையும் வழங்கப்பட்டது. பிறகு வந்த ஆட்சியில் அது நீக்கப்பட்டது , எனவே தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கு மானியம் , வரிச்தலுகையை மீண்டும் வழங்க முதல்வரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் இதனைபரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் கூறியதாக தெரிவித்தனர். 

இதையும் படியுங்கள்

டாப் ஹீரோஸுக்கு ஆப்பு வைக்கும் விதமாக புது ரூல்ஸ் போட்ட பெப்சி.. மீறினால் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை

click me!