TN Assembly : வெற்றி பெற்ற கையோடு தமிழக சட்டப்பேரவை கூட்டத்திற்கு தேதி குறித்த ஸ்டாலின்.!!எந்த தேதி தெரியுமா.?

By Ajmal KhanFirst Published Jun 7, 2024, 12:06 PM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையிலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது.  இந்த சூழலில் ஜூன் 24 ஆம் தேதி மானிய கோரிக்கை தொடருக்கான சட்டப்பேரவை கூட்டம் தொடங்கபடவுள்ளது.

சட்டப்பேரவை கூட்டம் எப்போது.?

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார். அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல் 2 நிமிடங்களில் தன்னுடைய உரையை முடித்தார். அதாவது, தமிழக உரையில் அரசியல் அமைப்புக்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் இருக்கிறது. தார்மீகத்துக்கு முரணான பல்வேறு கருத்துக்கள் இருப்பதால் தான் வாசிக்க மாட்டேன் என்று தெளிவுபடுத்திவிட்டு அமர்ந்தார்.

Latest Videos

இதன் காரணமாக சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையை முழுமையாக வாசித்தார். இதனால் தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பான சூழல் நிலவியது. அதற்கு மறுநாள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதங்கள் நடைபெற்றது.

அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்பட்டாரா எஸ்.பி.வேலுமணி?அதிமுக வாக்குகள் என்ன ஆச்சு.?3வது இடத்திற்கு தள்ளப்பட்டது ஏன்?

 திமுக எம்எல்ஏ மரணம்- இரங்கல் தீர்மானம்

தமிழக பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் நடைபெற்றது. அதற்கு பிறகு தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, ஜூன் மாதம் 24ஆம் தேதி மானிய கோரிக்கை கூட்டத்தொடர் தொடங்க இருப்பதாக அறிவித்தார். முதல் நாள் கூட்டத்தில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து கூட்டம் ஒத்திவைக்கப்படவுள்ளது.

இதனை தொடர்ந்து  தமிழக சட்டப்பேரவையின் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீது மீண்டும் விவாதங்கள் நடைபெறுகிறது. இதற்கு பின்பு சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடி கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யும்.  ஜூன் 24ஆம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் சுமார் 25 நாட்களுக்கு மேல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BJP : அண்ணாமலையா.? தமிழிசையா.? பாஜகவில் தொடங்கியது உட்கட்சி மோதல்.? மாஜி தலைவரை சீண்டும் வார் ரூம் நிர்வாகிகள்
 

click me!