
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள திரிகூடபுரம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்(எ) சிட்டிசன் என்பவரது மகன் திருமலைக்குமார். இவருக்கும் செங்கோட்டை பகுதியை சேர்ந்த ஜோதிமணி என்பவரது மகள் சுமித்ரா (30) என்பவருக்கும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஒரு குழந்தையும் பிறந்துள்ளது.
இந்த நிலையில் 12ம் வகுப்பு வரை படித்துள்ள மனைவி சுமித்ரா கல்லூரி சென்று படிக்க போவதாக கணவரிடம் கூறியுள்ளார். இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத கணவனர், மனைவி சுமித்ராவை கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். இதில் சிறிது கடன்சுமை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கடனை அடைப்பதற்காக கணவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.
அதன் பின்னர் மனைவி சுமித்ரா குழந்தை மற்றும் மாமியாருடன் வசித்து வந்துள்ளார். அப்போது வீட்டில் மாமியாருடன் வசித்து வந்த சுமித்ரா எப்போதும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளில் மூழ்கி கிடந்துள்ளார். இந்த நிலையில் தான் மதுரையைச் சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கணவர் வெளிநாடு சென்ற நிலையில், இதனை தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டு அந்த வாலிபருடன் இண்டாகிராம் மூலம் மிக நெருக்குமாக பழகிவந்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் செங்கோட்டையில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதாக மாமியாரிடம் கூறிவிட்டு சென்ற சுமித்ரா இரண்டு நாட்கள் ஆகியும் திரும்ப வரவில்லை. இதனை மாமியார் வெளிநாட்டில் இருக்கும் தனது மகனிடம் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அப்போது வெளிநாட்டில் இருந்த கணவர் தனது மனைவின் செல்போன் எண்ணிற்கு அழைத்தபோது போன் சுட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து கணவரின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு மனைவி சுமித்ரா குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். இதனை பார்த்த கணவருக்கு அதிர்ச்சி கார்த்திருந்து. அதில் மனைவி சுமித்ரா வேறொரு வாலிபரை திருமணம் செய்து கொள்ளும் காட்சிகள் இருந்துள்ளது. இதனை பார்த்த கணவர் மனைவியின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது செல்போன் எண் சுட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
கல்லூரி இளைஞர்கள் தான் டார்கெட்; கென்யா போதை பொருள் கடத்தல் கும்பலை பொறி வைத்து பிடித்த கோவை போலீஸ்
அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து மாமியாரின் செல்போன் எண்ணில் இருந்து போன் வந்துள்ளது. இதனை ஆண் செய்தபோது எதிர்முனையில் மாமியார் பேசியுள்ளர். எனது மகளை நீங்கள் இனிமேல் தொடர்பு கொள்ள வேண்டாம் அவள் வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டார் என்று சொல்லி விட்டு செல்போனை ஆப் செய்துவிட்டார். அதன் பின்னர் தொடர்பு கொண்ட போது மாமியார் செல்போன் எண் சுட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து வெளி நாட்டில் இருக்கும் கணவர் திருமலைக்குமார் என்ன செய்வது என்று தெரியாமல் தனது தாயாரின் செல்போன் எண்ணிற்கு அழைத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறியுள்ளார். அதன் அடிப்படையில் தாயார் சொக்கம்பட்டி காவல்நிலையத்திற்கு புகார் அளிக்க சென்ற நிலையில், காவலர் புகார் மனு வாங்காமல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு செல்லுங்கள் என்று கூறி அந்த மூதாட்டியை அனுப்பி வைத்துள்ளனர். இதனால் என்ன செய்வது என்று அறியாமல் தாயும், வெளிநாட்டில் இருக்கும் மகனும் தவித்து வருகின்றனர்.
மேலும் தன்னை படிக்க வைக்க பெற்ற கடனை அடைக்க வெளிநாடு சென்ற கணவரை பற்றி சற்றும் சிந்திக்காமல் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வாலிபரை திருமணம் செய்து கொண்டு ஓட்டம்பிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.