நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் தொடர்ந்து பின்னடைவு! அதிமுகவை முந்திய நாம் தமிழர் கட்சி!

By vinoth kumar  |  First Published Jun 4, 2024, 12:25 PM IST

நெல்லை மக்களவைத் தொகுதி திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ஆலங்குளம், ராதாபுரம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியது.


நெல்லை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். 

நெல்லை மக்களவைத் தொகுதி திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ஆலங்குளம், ராதாபுரம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 2019-ல் ஞானதிரவியம் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவருக்கு அடுத்தப்படியாக, அதிமுகவை சேர்ந்த மனோஜ் பாண்டியன் 2ம் இடத்தை பெற்றார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: virudhunagar constituency:விருதுநகர் தொகுதியில் ஓங்கி ஒலிக்கும் முரசு! காங்கிரஸ்? ராதிகா சரத்குமார் நிலை என்ன?

நெல்லை தொகுதி திமுக கோட்டை என கருதப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக இந்த தொகுதியை அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுத்தது. நீண்ட இழுபறிக்கு பின்னர் காங்கிரஸ் சார்பில் ராபர்ட் ப்ரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதிமுக சார்பில் முதலில் சிம்லா முத்துச் சோழன் அறிவிக்கப்பட்டு அவருக்கு கட்சிக்குள் இருந்து எதிர்ப்பு வர ஜான்சி ராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் களம் கண்டனர். 

நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதால் திருநெல்வேலி தொகுதி நட்சத்திர தொகுதியானது. இந்த தொகுதியில் தேர்தல் அறிவிக்கும் முன்னரே பிரச்சாரத்தை தொடங்கிய அசத்திய நயினார் நாகேந்திரன் தொடர்ந்து பின்னடவை சந்தித்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்று வருகிறார். 

இதையும் படிங்க:  Annamalai : கோவையில் ஒரு வாக்கு சாவடியில் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்ற அண்ணாமலை- பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சி

நெல்லை தொகுதி வேட்பாளர்கள்:

ராபர்ட் ப்ரூஸ் (காங்கிரஸ்) - 1,53,876
நயினார் நாகேந்திரன்(பாஜக) - 1,04,267
ஜான்சி ராணி(அதிமுக)- 28,337
பா.சத்யா(நாம் தமிழர்)- 30,643 

click me!