திருநெல்வேலி மாவட்டம் டவுன் வடக்கு ரதவீதியில் உள்ள சமோசா கடையில் இன்று திடீரென சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.
திருநெல்வேலியின் மையப் பகுதியான நெல்லை டவுன் எப்போதும் பரபரப்பாக இயங்கக்கூடிய பகுதியாகும். இதில் நெல்லையப்பர் கோவிலை சுற்றி அமைந்துள்ள 4 ரதவீதிகளும் எப்பொழுதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். ரதவீதிகள் அனைத்திலும் பிரமாண்ட துணிக்கடைகள், நகைக்கடைகள், பாத்திரக்கடைகள், உணவகங்கள் நிறைந்து காணப்படும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் திருமணம், உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு இங்கு பொருட்களை வாங்க வருவர். இதனால் அப்பகுதி எப்பொழுதும் பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கும்.
மேலும் நெல்லையப்பர் கோவிலில் ஆனி தேர் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே அங்கு வரும் பொதுமக்களை மையப்படுத்தி 4 ரதவீதிகளிலும் நூற்றுக்கணக்கான சாலையோர உணவகங்கள், தின்பண்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.
undefined
பூங்காவில் திடீரென ஆவேசமடைந்த மான் முட்டியதில் வன காவலர் பலி, ஒருவர் படுகாயம் - சேலத்தில் பரபரப்பு
இந்நிலையில் வடக்கு ரதவீதியில் செயல்பட்டு வந்த சாலையோர சமோச கடை ஒன்றில் வழக்கம் போல் இன்று வியாபாரம் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அப்போது கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட ஊழியர்கள் கடையில் இருந்து அவசர அவசரமாக வெளியேறினர். மேலும் விபத்து குறித்து பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்தனர்.
தலைக்கேறிய மதுபோதை; பெற்றோரிடம் தகராறு செய்த தம்பியை அடித்து கொன்ற அண்ணன் - ராமநாதபுரத்தில் பரபரப்பு
ஆனால் அதற்கு முன்னதாக கடையில் பயன்பாட்டில் இருந்த சிலிண்டர் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் அங்கு பெரும் புகைமூட்டம் காணப்பட்டது. இந்த விபத்தில் கடை ஊழியர்கள் மூன்று பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். தீ விபத்து ஏற்பட்ட உடனே அவர்கள் வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.