எங்கள் சிங்கம்! நெல்லையில் சண்டைச் சேவல் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர்!

By SG BalanFirst Published May 29, 2024, 9:58 AM IST
Highlights

பேட்டை பஜாரில் பரபரப்பாக இருக்கும் சாலையில் தான் வளர்த்த சேவலின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்துள்ளார். சேவல் தோற்றம், மறைவு தேதிகளையும் குறிப்பிட்டு சேவலின் படத்துடன் பேனர் அடித்திருக்கிறார்.

நெல்லை மாவட்டம் பேட்டையில் செல்ல பிராணியாக வளர்த்து வந்த சண்டை சேவல் இறந்து போனதால் அதன் உரிமையாளர் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்திருப்பது அப்பகுதி பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருநெல்வேலியில் அருகே பேட்டை செக்கடி திருத்து பகுதியைச்சேர்ந்த இளைஞர் ஒருவர் 2019ஆம் ஆண்டு முதல் ஒரு சண்டை சேவல் வளர்த்து வந்திருக்கிறார். அந்தச் சேவல் தன் ஆயுசு முடிந்துபோனதால் நேற்று (செவ்வாய்க்கிழமை) செத்துப் போய்விட்டது. ஆசையாக வளர்த்த சேவல் செத்ததைத் தாங்கிக்கொள்ள முடியாத அந்த இளைஞர் தன் துக்கத்தை வெளிப்படுத்த ஒரு பேனர் வைத்துவிட்டார்.

Latest Videos

பேட்டை பஜாரில் பரபரப்பாக இருக்கும் சாலையில் தான் வளர்த்த சேவலின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்துள்ளார். சேவல் தோற்றம், மறைவு தேதிகளையும் குறிப்பிட்டு சேவலின் படத்துடன் பேனர் அடித்திருக்கிறார்.

பெண் வேடமிட்டு திருமணம் செய்துகொண்ட ஆண்! 12வது நாளில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

மேலும், "வருந்துகிறோம்", "எங்கள் சிங்கம்" என்ற வாசகங்களையும் தனது கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் போர்டில் குறிப்பிட்டுள்ளார். அந்த வழியாகப் போவோர் வருவோர் அனைவரும் அந்த பேனரை வேடிக்கையாகப் பார்த்துச் சென்றனர். சிலர் தங்கள் மொபைலில் போட்டோவும் எடுத்துக்கொண்டனர்.

செவ்வயாக்கிழமை இரவு இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அனுமதியின்றி பேனர் வைத்திருப்பதாகக் கூறி, அந்த கண்ணீர் அஞ்சலி பேனரை அங்கிருந்து அகற்றினர். ஆனால், அதற்கு முன் பேனரை போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதால், இந்த பேனர் வைரலாகப் பரவி வருகிறது.

இதைப் பார்க்கும் நெட்டிசன்கள் சண்டைச் சேவலுக்கு கண்ணீர் அஞ்சலி பேனரா என்ற ஆச்சரியம் தெரிவிக்கின்றனர். இன்னும் சில நெட்டிசன்கள், செல்லமாக வளர்த்த சேவல் மீது அதன் உரிமையாளர் வைத்திருக்கும் பாசத்தைப் பாராட்டுவதாக் கூறி, இரங்கல் தெரிவிக்கின்றனர்.

20 வருட உத்தரவாதம்! AI தொழில்நுட்பத்தில் இயங்கும் இன்வெர்ட்டர் கம்ப்ரஸருடன் அதிநவீன பிரிட்ஜ்!

click me!