தமிழக அரசின் சூப்பர் திட்டம்.! மெரினா கடற்கரையை ரோப் கார் மூலம் 3 கி.மீ சுற்றிபார்க்கலாம்.? ஆராயும் அதிகாரிகள்

By Ajmal KhanFirst Published Jul 4, 2022, 9:10 AM IST
Highlights

சென்னையில் ரோப் கார் திட்டம் கொண்டுவர சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள் யோசனை தெரிவித்துள்ள நிலையில், திட்டத்தை செயல்படுத்த வேண்டிய சாத்திய கூறுகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளது.

சென்னையை அழகுபடுத்த திட்டம்

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னையில் அழகு படுத்தும் பணிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதன் ஒரு பகுதியாக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சென்னை அழகு படுத்த மாமன்ற உறுப்பினர்களிடம் யோசனைகள் கேட்கப்பட்டது. அந்த வகையில் பல்வேறு யோசனைகள் முன்மொழியப்பட்டது அதில் முக்கியமான ஒன்றாக, சென்னையின் முக்கிய சுற்றுலா தளங்கள் ஒன்றாக இருக்கக்கூடிய மெரினா கடற்கரையை வானத்தில் இருந்தபடி பார்க்கும் வகையில் ரோப் கார் திட்டம் கொண்டுவர மாமன்ற உறுப்பினர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். அந்தத் திட்டத்தின் படி நேப்பியர் பாலத்தில் இருந்து நம்ம சென்னை செல்பி பாயிண்ட் வரை மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் கட்டமாக ரோப் கார் திட்டத்தை கொண்டு வர யோசனை முன்மொழியப்பட்டிருக்கிறது. 

பணம் கொடுத்தால் மு.க.ஸ்டாலின் கூட அதிமுக பொதுச்செயலாளர் ஆகலாம்..! இபிஎஸ் அணியை கலாய்க்கும் டிடிவி தினகரன்

உஷார் மக்களே !! தொடர்ந்து 5 நாள் கனமழை.. இந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை..

3 கிலோ மீட்டர் சுற்றி பார்க்க திட்டம்

இந்த யோசனை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் சாத்திய கூறுகளை ஆராய்ந்து திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்று கண்டறிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.முதல் கட்டமாக ரோப் கார் திட்டம் கொண்டுவரப்பட்டதற்கு பிறகாக அடையார் ஆற்றங்கரையை ஒட்டியபடி சென்னையின் பாரம்பரிய கட்டிடங்களை ஒட்டியவாரும் ,நேப்பியர் பாலத்தில் இருந்து ராயபுரம் ரயில் நிலையம் வரையில் ரோப் கார் திட்டத்தை செயல்படுத்தவும் சாத்தியக்கூறுகளை ஆராய முடிவெடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் ரோப் கார் கொண்டு வர ஏற்கனவே சுதேசி தர்ஷன் என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் முடிவெடுக்கப்பட்டது ஆனால் பொருட்செலவு அதிகம் என்பதாலும் சுற்றுலா பயணிகளை அதிகமாக ஈர்க்காது என்பதாலும் திட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

பயணிகளை தரக்குறைவாக நடத்தக்கூடாது - போக்குவரத்துத்துறை கடும் எச்சரிக்கை !

 

click me!