அதிர்ச்சி !! முகப்பருவை நீக்க முகத்தில் ஊசியால் குத்திய ஆசிரியர்..முகம் வீங்கி துடிதுடித்து உயிரிழந்த மாணவன்

Published : Jul 03, 2022, 05:32 PM IST
அதிர்ச்சி !! முகப்பருவை நீக்க முகத்தில் ஊசியால் குத்திய ஆசிரியர்..முகம் வீங்கி துடிதுடித்து உயிரிழந்த மாணவன்

சுருக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு மாணவனின் முகத்தில் முக பருவை நீக்குவதாக ஆசிரியர் ஊசியால் குத்தியதில் மாணவன் முகம் வீங்கி, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள நம்மியம்பட்டு கிராமத்தில் வசிக்கும் பழங்குடி இனத்தை சேர்ந்த செவத்தான் என்பவரது 15 வயது மகன் சிவகாசி,  ஜமுனாமரத்தூர் வட்டத்தில் உள்ள அரசவெளி அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கி, 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.  இது குறித்து ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்தில் அவரது தந்தை செவத்தான் புகார் ஒன்றை அளித்த்துள்ளார். அதில் கூறபட்டுள்ள சம்பவம் தான் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க:வரதட்சணை வேணுமா உனக்கு? மாப்பிள்ளைக்கு தர்ம அடி கொடுத்த பெண் வீட்டார் - அதிர்ச்சி சம்பவம்

அதில் கடந்த மாதம் 28-ம் தேதி ஆசிரியை மகாலட்சுமி என்பவர் தொலைப்பேசி மூலம் எங்களை தொடர்பு கொண்டு தங்கள் மகன் சிவகாசிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மிக மோசமாக இருப்பதாக கூறினார். உடனே நாங்கள் பதறி அடித்துக்கொண்டு எங்கள் பிள்ளையை பார்ப்பதற்கு பள்ளிக்கு சென்றோம். அங்கு சென்று பார்த்த போது, மகனின் முகம் வீங்கி இருந்தது. அவனரிடம் என்ன நடந்தது என்று கேட்டதற்கு முகப்பருவை அகற்றுவதற்காக, ஊசியால் ஆசிரியை மகாலட்சுமி குத்தியதால் முகம் வீங்கியது என்று மகன் தெரிவித்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:மேம்பால பணியில் புதையல்.! பழங்காலத்து நகைகளை காட்டி ஓட்டல் உரிமையாளருக்கு விபூதி அடித்த வட மாநில கும்பல்

இதனையடுத்து காயமடைந்த மாணவனுக்கு, நம்மியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில், மாணவன் மேல்சிகிச்சையாக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவனின் மரணத்திற்கு காரணமான ஆசிரியை மகாலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய, ஜமுனாமரத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இதுக்குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!
சக மாணவர்களால் அடித்து கொ**ல்லப்பட்ட +2 மாணவன்.. சமுதாயம் எங்கே போகிறது..? அன்புமணி அதிர்ச்சி