மீண்டும் வெடிக்கும் ”தனி தமிழ்நாடு” கோரிக்கை.. பெரியார் முதல் அண்ணா வரை .. வரலாறு சொல்வது என்ன..?

By Ajmal KhanFirst Published Jul 3, 2022, 4:39 PM IST
Highlights

அண்ணா வழியில் பயணிக்கும் எங்களை தனி தமிழ்நாடு கோரிக்கை எழுப்பி பெரியார் வழியில்  செல்ல வைத்துவிடாதீர்கள். எனவே மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம் என ஆ.ராசா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தனி நாடும் வரலாறும்

அடைந்தால் திராவிட நாடு இல்லையென்றால் சுடுகாடு என்ற முழக்கம் 1938-லிருந்து ஒலிக்கத் தொடங்கியது. பெரியார், அண்ணாவில் தொடங்கி தற்போது ஆ.ராசாவரை தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். தனி நாடு கோரிக்கை இந்தியாவில் மட்டுமல்ல பல நாடுகளிலும் எழுந்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் வசிக்கும் பலூச் மக்கள், 'பலுச்சிஸ்தான்' என்ற தனிநாடு வேண்டும் என்று விரும்புகின்றனர். பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் வசிக்கும் பட்டான் சமூகத்தினர், 'பக்தூனிஸ்தான்' கோருகின்றனர். இதே போல பல நாடுகளில் தனி நாடு கோரிக்கை தொடர்பாக வாக்கெடுப்பும் நடத்தி தனி நாடு வழங்கப்பட்டுள்ளது. 1962 அக்டோபரில் வேலூர் சிறையிலிருந்து விடுதலையடைந்த அண்ணா, இந்திய- சீனப் போரினைக் கருத்தில்கொண்டு நாட்டின் ஒருமைப்பாட்டுக்குத் தீங்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்று திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார்.வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும். நாடு இருந்தால்தான் கட்சி நடத்தலாம். நாட்டுக்கே ஆபத்து என்று வந்திருக்கிற நிலையில் நாம் பிரிவினை பேசுவது வெளிநாட்டினருக்கு இடம் கொடுத்துவிடுவதாகும் என அண்ணா தெரிவித்தார்.

அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை விலைக்கு வாங்கிவிட்டார்... ஈபிஎஸ்-ஐ விளாசிய டிடிவி தினகரன்!!

பெரியார் வழியில் செல்ல வைத்துவிடாதீர்கள்

தனிநாடு கோரிக்கைகள் எழுவது உலகின் எந்தப் பகுதியாக இருந்தாலும் சரி, சம்பந்தப்பட்ட நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்  இருக்கும் அரசுகள் நாட்டைப் பிரிக்கவோ, விடுதலை கொடுக்கவோ தயாராக இருந்தது இல்லை. தனி நாடு தொடர்பான கோரிக்கைகள் வலுத்தாலும் உள்நாட்டு யுத்தங்கள் வலுத்தாலும், அவை நீண்ட காலம் தொடர்ந்தாலும், தனிநாடு கோரிக்கைகள் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசுகளால் முடக்கப்படுகின்றன. இந்தநிலையில்   ”உள்ளாட்சியில் நல்லாட்சி” எனும் தலைப்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தனி தமிழ்நாடு” கோரிக்கை மீண்டும் எழுப்பப்படும் எனும் வகையில் அவர் பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனி தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டு , திராவிட முன்னேற்ற கழகம் மாநில சுயாட்சிக்கு வந்துவிட்டது. ஆனால் எங்கள் தத்துவத்தின் பிதாமகனாக இருந்த பெரியார் சாகும் வரை தனி தமிழ்நாடு கேட்டு போராடினார் என்று பேசினார்.

மாநில சுயாட்சி இல்லையென்றால் !! தனி தமிழ்நாடு கேட்போம்.. ஸ்டாலின் முன்னிலையில் மிரட்டல் விடும் ஆ.ராசா..?

தனி கொடி வேண்டும்

அண்ணா வழியில் பயணிக்கும் எங்களை தனி தமிழ்நாடு கோரிக்கை எழுப்பி பெரியார் வழியில்  செல்ல வைத்துவிடாதீர்கள். எனவே மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம் என்று கூறியுள்ளார். ஏற்கனவே தமிழ்நாடு தமிழருக்கே என்ற பெரியார் தொடங்கிய தனி தமிழ்நாடு முழக்கம் தற்போது வரை நீடித்து வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பழ நெடுமாறன் உள்ளிட்டவர்களும்  தமிழ்நாட்டிற்கு என்று தனி கொடி வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். தற்போது தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவின் முக்கிய நிர்வாகியான ஆ.ராசா மாநில சுயாட்சி தாருங்கள் கோரிக்கை தமிழக அரசியல் கட்சிகளுக்கிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படியுங்கள்

ஓபிஎஸ்-வைத்தியலிங்கம் இடையே கருத்து வேறுபாடு..! புதிய குண்டை தூக்கிப் போட்ட நத்தம் விஸ்வநாதன்

click me!