பொங்கல் பரிசு ரூ.1000 எப்படி வழங்க வேண்டும்..! ரேசன் கடைகளுக்கு புதிதாக உத்தரவிட்ட தமிழக அரசு

By Ajmal KhanFirst Published Jan 9, 2023, 8:52 AM IST
Highlights

பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் வழங்கப்படவுள்ளநிலையில், ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் முழுக்கரும்பு எப்படி வழங்க வேண்டும் என ரேசன் கடைகளுக்கு கூட்டுறவுத்துறை சார்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
 

பொங்கல் பரிசு தொகுப்பு

தைப்பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள 2.19 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கத்துடன் முழுக் கரும்பு பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.இதற்காக அரசு ரூ.2,429 கோடி ஒதுக்கியுள்ளது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள 33 ஆயிரம் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. உணவு மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் இதற்கான வழிகாட்டுதல்கள் ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நான் பாஜகவில் சேரவே இல்லை.. பிறகு எப்படி விலக முடியும்? மீடியாவுக்கு எதிராக கொதித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.!

வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

அதன் படி, அதன்படி ஒவ்வொருவருக்கும் 6 அடி உயரம் உள்ள செங்கரும்பு தோகையுடன் வழங்கப்பட வேண்டும் என்றும் 500 ரூபாய் தாள்கள் 2 கையில் கொடுக்க வேண்டும் என்றும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை தரமானதாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேசன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஒவ்வொரு தெருக்கள் வாரியாக எப்போது வந்து மக்கள் பொங்கல் பரிசை வாங்க வரவேண்டும் என்று டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

டோக்கன் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்

டோக்கன் இல்லாதவர்கள் 13-ந்தேதி சென்று பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஒவ்வொரு ரேசன் கடைகளுக்கும் ஏற்கனவே பச்சரிசி, சர்க்கரை அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இன்று முழுக்கரும்பு மற்றும் பணம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்

தமிழக ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள்..! அரசுக்கு எதிராக அதிமுக..! அனல் பறக்கும் சட்டப்பேரவை கூட்டம்

click me!